காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷண் விருது எதற்கு? சவுண்டு கிளப்பும் தங்கர்பச்சான்

தங்கர் பச்சான் பேச்சையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொண்டால் கோடம்பாக்கத்திற்கு எல்லா நாளும் 144 தடையுத்தரவு போட வேண்டியிருக்கும். அப்படியொரு நாவன்மை படைத்தவர் அவர். இவரிடம் பாட்டு வாங்காத ஒரு சிலர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்தியாவுக்கோ, அல்லது அவரது நினைவுகளுக்கோ சம்பந்தப்படாத நபர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ‘அவர் பேசுறதுல என்ன குறை கண்டீங்க?’ என்று தங்கரின் பேச்சால் கவரப்பட்ட ஒரு பெரும் கூட்டமும் இங்கு இருப்பதுதான் அவரது பலமே! இப்பவும் அதே மாதிரியொரு சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் தங்கர். இந்த முறை அவரது அனல்வாய்க்குள் சிக்கிய பரிதாபப் புழு நம்ம கமல் சார்தான்.

சமீபத்தில் அவருக்கு பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த விருதை இன்னும் சில தினங்களில் டெல்லி சென்று வாங்கவிருக்கிறார் கமல். இந்த நேரத்தில்தான் கமலுக்கு இந்த விருதை கொடுத்ததை விமர்சித்து பேசியிருக்கிறார் தங்கர். கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் காசு வாங்கிட்டுதான் நடிக்கிறார். அவருக்கு இருக்கிற செல்வ சுபிட்சத்திற்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே? என்கிறார் தங்கர்.

இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும் என்று மேலும் கொஞ்சம் வெறியேற்றியிருக்கிறார் தங்கர். இப்போதைக்கு இது குறித்து கவலைப்பட வேண்டியது கமல் ரசிகர்கள்தான்.

Thankar Pachan questions the wisdom of giving Padma Bhushan to Kamal!

Producer-Actor-Director Thangar Pachan always talks from his heart and his bites have many a times hurt those who are in his firing lines. This time it is Kamal who get caught in his firing line, for the simple reason he was awarded Padma Bhushan by the Govt. of India. He said, “Kamal is a good and talented actor and I have no objection in giving the award to Kamal. But Kamal is taking money for his acting in films. Also he is well off and known around the world. K. Rajanarayanan, the writer and social activist even at the age of 92 still works for the welfare of the people. There are lot of people in other fields too, similar to Rajanarayanan. They could be recognised for their services and given the award. Now a days awards are not given, but bought”, he rued.

Read previous post:
நானே அப்பா டக்கர்… எங்கிட்டேவா? – பவர் ஸ்டாரை புலம்ப வைத்த கோலிசோடா சம்பள பாக்கி!

‘கோலிசோடா’வில், சோடா விஜய் மில்டனுக்கும், வெறும் கேஸ் மட்டும் அப்படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி ஓரு ஏப்பத்திற்கு ஆளாவோம் என்று அவரே நினைத்து...

Close