காடு காடு சவரிக்காடு

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ சவரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் சூரி, ரோபோசங்கர், சண்முகராஜன், அல்வாவாசு, அவன் இவன் ராமராஜன், சின்னசங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  கே.கோகுல்

இசை  –  A.T.இந்ரவர்மன்

பாடல்கள்  –  தேவதேவா, திருக்குமரன்

படத்தொகுப்பு   –  மாரீஸ்

கலை   –  எம்.ராஜாகண்ணதாசன்

நடனம்   –  விஜயபாண்டி

ஸ்டன்ட்   –  மிரட்டல் செல்வா

தயாரிப்பு மேற்பார்வை   –   ஆர்.நாகராஜன்

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு –  எம்.என்.கிருஷ்ணகுமார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

இந்த படத்தின் ஆரம்பம் சூரி மற்றும் ரோபோசங்கர் இருவரின் காமெடியில் கலகலப்பாக செல்லும். பின் பாரஸ்ட் ரேஞ்சராக சண்முகராஜன் வந்தபிறகு படம் திரில்லராக செல்லும் சவரிக்காட்டிற்குள் நடக்கும் கதை தான் இது.

இந்த சவரிக்காட்டோட ரகசியங்களை தெரிஞ்சுகிட்ட யாரும் இந்த காட்ட விட்டு உயிரோட வெளிய போக முடியாது என்பது மாதிரியான திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இந்த சவரிக் காட்டிற்குள் நடக்கும் திரில் சம்பவங்கள் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருக்கும்.

கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் எம்.என்.கிருஷ்ணகுமார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காரசாரமான இஞ்சி முறப்பா ஸ்டில்ஸ்

Close