“ காதலி காணவில்லை “ கிஷோர் – ஹார்திகா நடிக்கிறார்கள்

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.

கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார்.  மற்றும் சோப்ராஜ், பத்மாவசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –    தயாள் ஓஷோ

இளையகம்பன், அண்ணாமலை பாடல்களை  எழுதுகிறார்கள் .

தேவா இசையமைக்கிறார்.

கலை  –    சுந்தர்ராஜன் /  எடிட்டிங்      –   தேவராஜ்

தயாரிப்பு நிர்வாகம்   –  ராகுல் /  தயாரிப்பு   –  ஆர்.பி.பூரணி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் ரவி ராஜா.

படம் பற்றி இயக்குனர்களிடம் கேட்டோம்….

இது ஒரு ஆக்ஷன் கலந்த படம்.  ஒரு மிகப்பெரிய தாதாவின் வாழ்கையை நாம் ரத்தமும், சத்தமுமாகத்தான் பார்த்திருக்கிறோம். காதலி காணவில்லை படத்தில் அதை மீறி ஒருவனது உள்மனசு வெளிப்படும்.    சமீபத்தில் இந்த படத்திற்காக தேவா இசையில் இளையகம்பன் எழுதிய பாடலான

“ நான்தான் டா சென்னை கிங்

சும்மா நச்சுன்னு எடுப்போம் நுங்கு

ஆட்டயதான் போடுவோம் இங்கு –  வால

ஆட்டுனா ஊதுவோம்  சங்கு “ என்ற பாடல் ஸ்ரீ காந்த்தேவா பாட பதிவானது. அப்பா இசையில் மகன் பாடிய இந்தபாடல் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்று நம்புகிறோம்.

கிஷோர் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் உடனே நடிக்க ஒத்துக்கொண்டார். படத்திற்காக நிறைய செலவு செய்வதுடன் ஒரு நல்ல காதாப்பாதிரத்தில் அதாவது காமெடி அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார் ஜி.ஆர் என்றார்கள் இயக்குனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிங்கா ஷூட்டிங் பிரச்சனை ! முதல்வர் வரைக்கும் ஓடிச் சென்று மனு கொடுத்த கன்னட வெறியர்கள்

கல்லெறியணும்னு முடிவு பண்ணிட்டா அது கண்ணாடியா இருந்தால் என்ன? கடவுள் சிலையா இருந்தால் என்ன? என்கிற மனத் திமிருக்கு வந்துவிட்டார்கள் குழப்பவாதிகள். பெரும்பாலும் சினிமாவையும் சினிமாக்காரர்களையும் மட்டுமே...

Close