காத்திருக்கிறார் சேரன்
தலைவா படம் வெளியாவது குறித்த செய்திகளாலும், அது குறித்த குழப்பங்களாலும் சேரனின் மகள் தாமினி பற்றிய பிரச்சனையின் வீரியம் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. இது ஒரு விதத்தில் நல்லதும் கூட என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சேரன் வட்டாரத்தில். தாமினி படிக்கும் பள்ளியின் தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் தாமினி. இங்கு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் செலுத்தும் அன்பு, அக்கறை, இவை பற்றி போதிக்கப்படுகிறதாம் தாமினிக்கு. அத்துடன் படிப்பை முடித்தவுடன் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்கிற கோணத்தில் நடக்கிறதாம் இந்த கவுன்சிலிங். நீ காதலிக்கும் பையன் எப்படிப்பட்டவன் என்பது பற்றி சில ஆவணங்களையும் தாமினிக்கு காட்டப்பட்டதாம். முன்பு மனசை இரும்பாக்கி வைத்திருந்த தாமினி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல். இம்மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜராகவிருக்கும் தாமினி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறார் சேரன். பெத்த மனம் பித்து. பிள்ளை மனமும் பித்து என்பது போலவே இருக்கட்டும் தாமினியின் பதில்.