கார்த்திகாவுக்கு கல்யாணம்… – அம்மா ராதா அதிரடி முடிவு

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், ‘ஐ ப்ரோ’ கண்ணழகி கார்த்திகா விரைவில் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்… போகிறார்… போகிறார்…

‘போகட்டும்… யாருக்கென்ன நஷ்டம்?’ என்று இந்த விஷயத்தை அலட்சியமாக நோக்கும் கலையுலக ரசிகர்கள் இதை அம்மா ராதாவின் மனக்கண்ணால் பார்த்து மவுனம் கொள்ளூம்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று மையம் கொண்ட வலுவிழந்த புயலான கார்த்திகா மேலும் வலுவிழந்த காரணத்தால், ஒரே வழி கல்யாணம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ராதா.

அண்மையில் இந்திய திரைப்பட விழாவின் 100 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகள்கள் சகிதம் வந்திருந்த ராதா, அங்கிருந்த தனது சக தோழிகளிடம் இந்த விஷயத்தை சொல்லி, அவ இதுவரைக்கும் யாரையும் காதலிக்கல. அதனால் நல்ல பையனா இருந்தா சொல்லுங்க, முடிச்சுரலாம் என்றாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நாளில் இருந்தே அத்தனை நடிகைகளும் தனித்தனி மேட்ரிமோனியல் வெப்சைட் லெவலுக்கு செயல்பட, கல்யாண விவகாரம் கடைத்தெரு வரைக்கும் வந்துவிட்டது.

‘கோ’ வில் அறிமுகமான கார்த்திகாவை அவ்வளவு சீக்கிரத்தில் ‘go’ என்று சொல்லிவிட்டதே சினிமா…

Mother Radha pushing her daughter Karthika for marriage

Ko girl Karthika has not been able to sustain or keep her position in tact, despite her best ‘efforts’ and the strong inflence her mother weilds in the industry. Karthika could not get a film of potence to take her to the next level. Disgusted mother, has decided to get her married now. She seems to have alerted her former colleagues during the recent Indian Cinema Centenary celebrations held at Chennai, to find a bridegroom for Karthika. The matromonial request has come to streets. While we are sad for Karthika, we wonder, how and why Radha behaves like a conservative mother of 19th century. Having been in the cine filed for quite a long time, she ought to have advised her daughter that success and failure in cinema comes alternatively and one has to wait for success to come and embrace them. Instead of advising Karthiga not to lose heart and to be postive, she is literally giving her a punishment by planning to get her married!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோடம்பாக்கத்தில் ரகசியமாக சுற்றும் மற்றுமொரு லவ் ஜோடி…

குருட்டுப்பூனை இருட்டுல அலைஞ்ச மாதிரி, எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் கண்ணு முழிச்சாவது கவனிக்கிற வழக்கம் இருக்கு காதல் விவகாரத்தை. தமிழனின் இந்த தலையாய கடமையால் தடுமாறிப் போவது...

Close