காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை அனுப்பிய சிறுவன்

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை ஒரு சிறுவன் அனுப்பி வைத்தான்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ‘ஷுரிச்’ நகரைச் சேர்ந்த சிறுவன் சாமுவேல்ஹெஸ் (15). இவன் காற்று மண்டலத்துக்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கத்தியை அனுப்பி பறக்க வைக்க திட்டமிட்டான்.

அதன்படி தட்பவெப்ப நிலையை சமாளித்து தாங்கக்கூடிய 3 மீட்டர் பலூனில் ராணுவ வீரர்களின் கத்தியை கட்டி பறக்க விட்டான்.

கத்தியுடன் காமராவையும் பாராசூட்டையும் இணைத்து இருந்தான். இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 15–ந்தேதி ஷுரிச் அருகேயுள்ள அட்லிகான் என்ற இடத்தில் நடந்தது. அதன்படி அந்த பலூன் திட்டமிட்டபடி பூமியில் இருந்து 30 ஆயிரம் அடி உயரத்துக்கு பறந்து காற்று மண்டலத்தை அடைந்தது.

அதற்காக அது 1 மணி 30 நிமிட நேரம் எடுத்து கொண்டது. பின்னர் அப்பலூன் வெடித்த பின் பாராசூட்டுன் இணைக்கப் பட்ட கத்தி காற்றில் மிதந்த படி பூமிக்கு திரும்பி வந்தது.

இக்காட்சியை அத்துடன் இணைக்கப்பட்ட காமிரா படம் பிடித்தது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த...

Close