காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்: ஐ.நா. தகவல்

சுற்றுச்சூழல், காற்று மாசுபடுதல் தற்போது உலகை அச்சுறுத்தும் ஒன்றாக விசுவரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்துள்ளது.

அதில் ‘கடந்த 2012-ம் ஆண்டில் காற்று மாசுப்பாட்டின் பாதிப்பால் உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் இறந்து இருக்கிறார்கள்’ என்பதாகும். இது அதிர்ச்சி தரும் தகவல் மட்டுமின்றி மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம் என இந்த அமைப்பின் தலைவர் மரியா தெரிவிக்கிறார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘இந்த மாசினால் வீட்டிற்கு உள்ளும், வெளியேயும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வீட்டிற்கு சமையலுக்கு விறகு, நிலக்கரிகளை எரிப்பதன் மூலம் 40 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளார்கள். வீட்டிற்கு வெளியே வாகன புகை, நிலக்கரி, காடுகள் எரிப்பது ஆகியவை மூலம் சுமார் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

காற்று மாசினால் இருதய கோளாறு, வலிப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது’ என்று அவர் கூறினார். குறிப்பாக ஆசிய நாடுகளிலேயே வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் என்றும் விளக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அடுத்த (ஏப்ரல் மாதம்) 7-ந்தேதி நடக்கிறது. துணை கலெக்டர்-8, போலீஸ் துணை சூப்பிரண்டு-4,...

Close