காலமான இயக்குனர் கனவில் வந்த அதிசயம்! கண்ணீர் ததும்ப ஒரு பாடல் வெளியீட்டு விழா….

வாழ்க்கையை படமாக எடுக்கும் இயக்குனர்களே எதிர்பாராமல் ‘படமாகி’விடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சோகம்? பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் என்று மதுரை மண்ணின் பெருமைகளை மட்டுமல்ல, மண்சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் படம் பிடித்தவர் ராசு,மதுரவன். வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், அகால மரணம் அடைந்த பின், அவர் கடைசியாக இயக்கிய ‘சொகுசுப் பேருந்து’ திரைப்படம் அதற்கப்புறம் வளர முடியாமல் போனது. நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கண் மூடிவிட்ட அவரது கடனை யார் அடைப்பது? பெட்டிக்குள் முடங்கிய படத்தை யார் மீட்பது? இந்த கேள்விகள் எதற்கும் பதில் தெரியாமல் தத்தளித்தது அவரது குடும்பம்.

இதோ- படத்தை மட்டுமல்ல… அந்த குடும்பத்தின் கண்ணீரையும் துடைக்க ஏராளமான ஆதரவு கரங்கள் நீள ஆரம்பித்துவிட்டன. ராசு.மதுவரனின் பள்ளிக்கால தோழர், அவரால் புகைப்பட கலைஞராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டில்ஸ் குமாரின் முயற்சியால் படம் ஆடியோ வெளியீட்டு விழா வரைக்கும் தத்தி தவழ்ந்து வந்துவிட்டது. இந்த விழாவில் ஒரு நாற்காலி போடப்பட்டு அதில் நடுநாயகமாக ராசு.மதுரவனின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாரு. சாகுறதுக்கு முன்னாடி அவரை ஆஸ்பத்திரியில் பார்த்தேன். குமாரு… என்னால இனிமேல் வந்து இந்த படத்தை முடிக்க முடியும்னு தோணல. நீயே இருந்து இந்த படத்தை முடிச்சுரு என்று என்னிடம் சொன்னார். அதெல்லாம் இல்ல. நீ நல்லா வந்து இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவேன்னு சொன்னேன். ஆனால் போய் சேர்ந்துட்டாரு என்று துக்கம் தொண்டையை அடைக்க பேசினார் குமார். அதற்கப்புறம் தனக்கு தெரிந்த இயக்குனர்களை அழைத்து வந்து எடுத்த வரைக்குமான படத்தை போட்டுக் காட்டினாராம். அவர்கள், ‘சின்ன சின்ன திருத்தங்கள் இருக்கு. சில காட்சிகளை நீக்கிட்டு புதுசா ஷுட் பண்ணி சேர்த்தா படம் ஹிட்டாகும்‘ என்றார்களாம். சரி… எப்படியாவது பணத்தை புரட்டி அதை செய்துவிடலாம் என்று குமார் நினைக்கும்போதுதான் அந்த ஆச்சர்யம்.

திடீரென்று ஒரு நாள் கனவில் வந்த ராசு.மதுரவன், ‘குமாரு… படத்துல எந்த சீனையும் நறுக்க வேண்டாம். அப்படியே ரிலீஸ் பண்ணு. இந்த படம் ஹிட்டாகும்’ என்றாராம். அதற்கப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுவிட்டு படத்தை வெளியிடுகிற வேலைகளில் இறங்கினேன் என்றார் குமார்.

தயாரிப்பாளர் சங்க பிரமுகர்கள், இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் என்று நிறைந்திருந்த சபையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசிய வார்த்தைகள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘கலைநிகழ்ச்சிக்காக வெளிநாட்டுக்கு போகும்போது கவனிச்சிருக்கேன். நாங்க பிளைட் ஏறும்போது எங்களுக்கு இன்ஷியூரன்ஸ் போடுறாங்க. ஏதாவது ஒன்ணு ஆச்சுன்னா அது உதவுமே என்றுதான். அது மாதிரி, இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸியில் இருக்கிற எல்லா சங்கங்களும் உறுப்பினரா சேரும்போது ஒரு கட்டணம் வசூலிக்கிறீங்க. அந்த பணத்துல ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா இன்ஷியூரன்ஸ் போடணும்னு கேட்டுக்குகிறேன். என் சார்பா அவரோட குடும்பத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் தர்றேன். இதை நான் தனியாக கூட கொடுத்திருப்பேன். ஆனால் இங்கே வச்சு கொடுத்தால் இன்னும் நாலு பேர் உதவ முன் வருவாங்களேன்னுதான் இங்க வச்சு கொடுக்கிறேன்’ என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய டைரக்டர் சேரன், தனக்கும் ராசு.மதுரவன் என்கிற கருப்பையாவுக்கும் இருந்த நட்பை பற்றி பேசினார். இறுதியாக என்னுடைய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் சென்னை நகரத்தின் முதல் நாள் வசூலை ராசு.மதுரவன் குடும்பத்துக்கு கொடுப்பேன் என்றார் அரங்கு நிறைந்த கைத்தட்டல்களோடு.

அப்படியே அவர் சொன்ன இன்னொரு யோசனை மிக முக்கியமானது. ராசு.மதுரவன் உயிரோடு இருந்தபோது நிறைய பேரிடம் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் அவருக்கு அந்த கிரடிட் கொடுப்பதுடன், ஒரு தொகையை அவரது குடும்பத்திற்கு கொடுத்து உதவலாம் என்றார்.

கழுத்தை சுற்றி மூக்கை தொடுகிற ஒவ்வொரு சினிமாகாரர்களுக்கும் ஒரு சின்ன ஆலோசனை… இந்த படத்தை தயாரிப்பாளர் சங்கமும், இயக்குனர் சங்கமும் நேரடியாக வெளியிட்டு அதில் வரும் லாபத்தை ராசு.மதுரவனின் குடும்பத்திற்கு வழங்கலாம். இந்த படம் வருகிற நேரத்தில் குறைந்தது ஒரு வாரத்திற்கு வேறு படங்களை தியேட்டர் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். அந்த குடும்பம் தன் குடும்ப தலைவன் வைத்துவிட்டு போன கடனை அடைப்பதுடன், இரண்டு பெண் குழந்தைகளை ஜாம் ஜாமென்று வளர்க்கிற அளவுக்கு தெம்பாகிவிடும்.

பலவான்களின் கைகளில்தான் இருக்கிறது அந்த பச்சைக்கிளிகளின் சிறகுகள்…

Sogusu Perundhu audio event turns emotional!

Untimely death of director Rasu. Madhuravan who earlier produced and directed Pandi, Mayandi Kudumbathar, Gori Palayam, left not only his family in the lurch but also his film Sogusu Perundhu as well. Unable to know how to go ahead to complete the film nor how to settle the debts late Madhuravan had raised for the film, the family was in dire straits.

Thankfully help came in the form of Madhuravan’s school mate who was introduced to filmdom as cameraman and an actor, Kumar, who took the mantle upon himself and put his efforts to get the film released.

Speaking on the audio launch of the film Sogusu Perundhu, he narrated his turbulence to audience. He showed the partially completed film to some of the directors who suggested changing certain scenes and completing the film to make it a hit. However Madhuravan came in Kumar’s dream and asked him to complete the film without any deletion and told him that the film would be commercially successful. Thereafter he started the work for releasing the film by himself.

Mayilsamy, comedian when speaking during the event suggested to Producers’ Council, Directors’ association, FEFSI, to make an insurance to each and every member of their respective association so that the deceased family can get help from such insurance. He also gave Rs.20000/= to Madhuravan’s family and said he could have given the money at their home separately, but by giving the money here may moot others also to contribute something to Madhuravan’s family.

Director Cheran recalled his friendship with Madhuravan and assured that first day’s collection at Chennai centre will be given to the family of Madhurvan as his personal contribution, amidst huge applause. He also requested that those directors to whom late Madhuravan had narrated the story based on which they are planning to take film, can contribute to the family of Madhurvan directly.

Still another best recourse will be Producers’ council can release the film on its own and hand over the profit to Madhurvan’s family who will be immensely benefited by such kind act, by solving their debts as well as the two young daughters of Madhurvan will find a way to lead a good life.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இரட்டை வேடத்தில் விஜய் இது புதுப்பட பில்டப்!

ஏ.ஆர்,.முருகதாசுடன் விஜய் நடிக்கும் படத்தில் பள பள மற்றும் பல பல சுவாரஸ்யங்கள் இருக்கிறதாம். ‘நான் எதுவுமே சொல்றதில்லை, அவங்களா கதை கட்றாங்க என்று முருகதாஸ் புலம்பினாலும்......

Close