காலில் முள்ளு, இறக்கையும் பஞ்சர்… – என்னதான் செய்வார் வெங்கட்பிரபு?
பிரியாணி தள்ளிப் போனதில் அநியாயத்திற்கு விரக்தியில் இருக்கிறார் வெங்கட்பிரபு. அது வருகிற வரைக்கும் காத்திருப்பதை விட இன்னொரு படத்தை இயக்கலாம் என்று நினைத்திருந்தவரை, செமத்தியாக ‘லாக்’ போட்டுவிட்டார் பிரியாணி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. வேறொன்றுமில்லை, பிரியாணிக்கு பிறகு அடுத்த படமும் இதே கம்பெனிக்கு இயக்கி தருவதாக அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டிருக்கிறாராம் அவர்.
கால்ல முள்ளு, இறக்கையும் பஞ்சர்னா அவர்தான் என்ன செய்வார் பாவம்? இன்று கனத்த மனதுடன் பிரஸ்சை சந்தித்தவர், தனது பருத்த சிரிப்பை கொண்டு கனத்தை மறைக்க முயன்றார். இருந்தாலும் பளிச்சென்று எட்டிப்பார்த்தது அந்த கவலை. வெந்த மனதிற்கு வெந்தய ஒத்தடம் கொடுப்பது மாதிரி கேள்வி கேட்க வேண்டாமா? பிரியாணி டிலே ஆகறதாலதான் நீங்க மலேசியா, சிங்கப்பூர்னு இசை நிகழ்ச்சி நடத்துற யுவன், கார்த்திக் ராஜாவோட கிளம்பிடுறீங்களா என்றொரு கேள்வியை கேட்டது பிரஸ்.
எப்படியோ இந்த கேள்வியை சமாளித்த வெங்கட்பிரபு சொன்ன பதில்தான் மேற்படி விஷயத்தை மேலும் உறுதி படுத்தியது. இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஐந்து பேர் டைரக்டர்களாகிவிட்டார்களாம். அவர்களின் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கப் போகிறாராம்.
ஆமாம்…அவருக்கும் பொழுது போகணும்ல…?
Venkat Prabhu to take up acting for now!
Venkat Prabhu who could not get away from him commitment to Gnanavel Raja of Studio Green, to do his next film (Venkat’s Briyani is already a delayed one as no murmurs even on the day of its release) is a frustrated man. His frustration was showing in his press meet. When quizzed him as to why not he tour with his brother Yuvan to Malaysia and Singapore for music programmes, he hid his anxiety with a smile saying that his assistants have now become directors. So he would be taking up small character roles in their films, till he commences his next project, he confessed. Obviously he needs to keep his brain engaged, is it not?