காலேஜுக்கு நடந்தே போவாராம்… – பிரபல ஹீரோவுக்கு தயாரிப்பாளர் பாராட்டு

 

 

பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் தங்கை வீட்டில் தங்கிதான் படித்தாராம் விக்ரம் குமார். இந்த ‘கும்கி’ குமாரின் அடக்கம் பற்றி அப்படி சிலாகிக்கிறார் தியாகராஜன்.

நடிகர்களில் அதிகம் படித்தவர்கள் திரிகிற கோடம்பாக்கத்தில் அதைவிட அதிக கெத்தோடு திரியக்கூடிய எல்லா தகுதியும் விக்ரமுக்கு உண்டு. ஏனென்றால் இவர் சிவாஜியின் பேரன். படித்த படிப்பையும் அமெரிக்காவில் படித்தவர். அப்படி அமெரிக்காவில் இவர் தங்கியிருந்த இடம்தான் தியாகராஜனின் சகோதரி வீடு.

காலேஜுக்கு பல முறை நடந்தேதான் போவாராம். அவருக்கு இருக்கிற வசதி வாய்ப்புக்கு அவர் எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம். பட் ரொம்ப அடக்கமான பையன் என்றார் சத்யஜோதி தியாகராஜன்.

அந்த அடக்கம்தான் துங்காநகரம் டைரக்டரான கௌரவ்வையும் நிம்மதியாக படம் எடுக்க வைத்திருக்கிறது. இவர் இயக்கிக் கொண்டிருக்கும் சிகரம் தொடு படத்தின் ஷுட்டிங் பத்ரிநாத்தில் நடந்ததாம். (சமீபத்தில் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்கி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உயிரை சூறையாடியதே… அதே ப்ளேஸ்தான்) இந்த களேபரங்களுக்கு முன்புதான் அங்கே சென்றிருந்தார்களாம் படக்குழுவினர்.

அங்கு மைனஸ் டிகிரி குளிரில் ஆற்றோரத்தில் படப்பிடிப்பை வைத்தோம். கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் தொடர்ந்து 24 மணி நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார் விக்ரம் சார்… இப்படி நெகிழ்ந்தார் கௌரவ்.

பேசியதை பார்த்தால் சும்மா கௌரவத்திற்காக பேசியதாக தெரியவில்லை. சிகரம் தொடு டிசம்பரில் திரைக்கு வருகிறதாம். அடக்கத்தில் சிகரத்தை தொட்டவரின் படம். ஜெயிக்கட்டும்…

Director Gaurav praises Vikram Prabhu

Director Gaurav of Thoonga Nagaram is directing his next film Sigaram Thodu with Vikram Prabhu in the lead. This Kumki actor is unique in several ways as he has never exhibited his position as the grandson of legendary actor Sivaji Ganesan, and son of equally popular actor Prabhu. Vikram had his studies at United States. He stayed at Sathyajyothi Thiagarajan’s sister’s home, there. Thiagarajan was also full of praise for Vikram’s humility and politeness.

Speaking about Sigaram Thodu, director Gaurav said that they had shooting schedule at Badhrinath and Kedarnath, where nature’s fury swept the entire town. Luckily before the disaster occurred, the team went there and shot the sequences. Gaurav said that Vikram was all humility with no complaints, about shooting in sub-zero temperature. Also he shot his scenes continuously without rest.

We wish Kumki star continues to follow his humility and politeness to score high in his life and career!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்…” – நஸ்ரியா விஷயத்தில் ஜீவா உறுதி

  ‘யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் நினைச்சது நினைச்சதுதான்.... ’ இப்படி ஜீவா சொன்ன ஒரு பதிலால் அவருக்கு அட்வைஸ் பண்ணிய அத்தனை பேரும் அப்செட்....

Close