கால்பந்தாட்டம் பற்றிய படம் “ ஐவராட்டம் “
சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார்.
வில்லனாக C.K.செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு
இசை – சுவாமிநாதன்
பாடல்கள் – மோகன்ராஜன்
கலை – மயில்கிரிஷ்
நடனம் – நந்தா
எடிட்டிங் – சூர்யா
தயாரிப்பு மேற்பார்வை – கோடை சலீம்
தயாரிப்பு – C.K.செந்தில்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மிதுன்மாணிக்கம்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த உண்மை கதை இது. இன்று இந்தியாவில் கிரிகெட்டுக்கு நிகராக கால்பந்தாட்டமும் புகழ் பெற்று வருகிறத. அது தவிர வழக்கமான சினிமாவில் இருந்து விலகி விளையாட்டை பிரமாதப் படுத்தி படங்கள் தயாராகிக் கொண்டிருகிறது. அதில் நாங்களும் பங்கு கொள்கிறோம் எனும் போது பெருமையாக இருக்கு.
அடுத்த தலைமுறை அறிவுபூர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விளையாட்டும் முக்கியம் என்பதை கமர்ஷியலாக உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மிதுன்மாணிக்கம்.