காளி போய் கபாலி வந்தாச்சு… டும் டும் டும்!

ஊருக்கெல்லாம் காளின்னு அறிவிச்சாங்களே ஒழிய, முதல் நாள் ஷுட்டிங்ல ஒரு இடத்துலயாவது காளின்னு எழுதணுமே, ம்ஹூம். கார்த்தியும், அட்டக்கத்தி ரஞசித்தும் இணைகிற புதிய படத்திற்கு காளி என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்துவிட்டார்கள். அதற்கப்புறம் சிலர் வரலாற்றின் கருப்பு பக்கங்களை சுட்டிக்காட்டினார்களாம் அவர்களுக்கு.

பத்ரகாளி என்றொரு படம். ராணிசந்திரா கதாநாயகி. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே விமான விபத்தில் அநியாயமாக செத்துப் போனார் அவர். இந்த சம்பவத்தை நினைவூட்டிய சிலர், அதுவரைக்கும் போட்ட குண்டு போதாது என்று மேலும் ஒரு ஆர்டிஎக்சை ரெடி பண்ணினார்கள். அதுவும் காளிதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காளி படத்தின் ஷுட்டிங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பலர் ஸ்பாட்டிலேயே இறந்து போனார்கள். அதுமட்டுமல்ல, படத்திற்காக பயன்படுத்தப்பட்ட குதிரைகள் கூட எரிந்து சாம்பலாயின. இவ்வளவுக்கு பிறகும் உங்களுக்கு காளிங்கிற டைட்டில்தான் பிடிச்சுருக்குன்னா வச்சுக்கோங்க என்று அந்த திகில் பார்ட்டிகள் அச்சுறுத்த, அந்த நிமிஷமே தலைப்பை எரேஸ் பண்ணிவிட்டார்களாம் கார்த்தியும், ரஞ்சித்தும்.

இப்போது படத்திற்கு கபாலி என்றொரு தலைப்பை வைத்திருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் யாரோ ஒரு புண்ணியவான் இந்த தலைப்பை கவுன்சிலில் ரிஜிஸ்தர் செய்து வைத்துவிட்டு தரவே மாட்டேன் என்கிறாராம். வட சென்னை கதை. கபாலிங்கிற டைட்டில். பொறுத்தமா இருக்கு விட்ராதீங்க என்கிறார் கார்த்தி.

கபாலி மனசு வைச்சாதானே?

Story behind change of title for Karthi’s Kaali

Attakathi Ramesh and Ranjith teamed up to do a film with Gnanavel Raja’s production banner. The film was titled as Kaali, and the shooting too commenced. But there were hitches from known and unknown sources, suggesting the Kaali team to change the title. No this was not from any ethnic group or religious group. They are said to be well wishers of the team. They pointed out few decades ago, a film with title ‘Badhrakali’ was made, and during the shooting time itself, its heroine, Rani Chandra was dead in an air accident. Another set of people pointed out that Rajini starrer Kaali too met with similar ‘omen’, this time during the shoot of stunt scenes when stunt artistes and horses were burnt to death. Hearing these tales, both the actor and the director wanted to change the title, and decided on alternative title Kabali. Unfortunately that title was registered with Producers’ Council, and the person who has registered it, does not want to part with it. But Karthi insists to his director and producer to get the title some-how, as the title will be apt, for the film is a north Chennai based one. It is now up to the producer and director to ‘bell the cat’, ‘some-how’!

Read previous post:
பாலகிருஷ்ணாவோட நடிக்க முடியலையே… – நயன்தாரா ஷாக்!

ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடிக்கிற படங்களில் அவரது பேத்தி வயசுள்ள இளம் ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பார்கள். அதுவும் பிரபல நடிகைகளே இந்த பலியாடு போட்டிக்கு நான் நீ...

Close