காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள், விடிய விடிய நடந்தது என்ன?

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன்,  ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –    ரத்தீஷ்கண்ணா /
இசை    –   வில்லியம்ஸ்
பாடல்கள்    –  பாரதி, பொன்முத்துவேல்   /
கலை   –  பத்து  /
எடிட்டிங்    –   நதிபுயல்
நடனம்   –  தினா /
தயாரிப்பு மேற்பார்வை  –  கார்த்திக் ரெட்டி
நிர்வாக தயாரிப்பு   –  பொன்ராஜ்
இணைதயாரிப்பு   –  R.Y.ஆல்வின், R.Y.கெவின்

தயாரிப்பு   –  R.L.யேசுதாஸ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  லாரா.   இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.   படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது …..    இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. 

மனித வாழ்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடி போகிற இடமாக காவல்நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்பார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை  மறந்துவிடுவோம். ஆனால் இதில் ஊரில் இருந்து ஓடி வந்த  நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப் படுகிறார்கள் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் தான் காமெடி தான் இந்த படத்தின் திரைக்கதை.

படம் வெளியான பிறகு ரசிகர்கள் இது போன்று ஒரு காவல் நிலையம் நம்ம ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு காமெடி காவல் நிலையமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அணைத்து காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டது.  படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

Read previous post:
த்ரிஷா, டாப்ஸி ஓ.கேவாம்! டேக் ஆஃப் ஆகுது செல்வராகவன் படம்!

தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா? துவங்கினாலும் நிறுத்தப்படாமல்...

Close