கிசுகிசுவா எழுதுறீங்க – வெளுக்கும் பாண்டிராஜ்

டைரக்டர் பாண்டிராஜ் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வார்த்தைகளில் நெளிவு சுளிவுகளுக்கும் இடம் தரமாட்டார். அப்படிப்பட்டவரை பற்றி ஒரு கிசுகிசு வந்தால் சும்மாயிருப்பாரா? அதற்கு தக்க விளக்கம் கொடுத்து ஊர் வாயை அடைத்திருக்கிறார்.

மூடர் கூடம் என்ற படத்தை இவரே வாங்கி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போகிறார். இந்த கைங்கர்யம் எதற்காக? இப்படியொரு கேள்வி இங்கே எழ, அதற்கான காரணத்தையும் கேள்வி கேட்டவர்களே கிளப்பிவிட்டார்கள். அதாவது இந்த படத்தில் ஓவியாதான் ஹீரோயின். அவர் கேட்டுக் கொண்டதால்தான் இந்த மூடர் கூடம் படத்தை பாண்டிராஜ் வாங்கி வெளியிடுகிறார். ஓவியாவுக்காக ஒரு படத்தையே வாங்கி வெளியிடுகிறார்கள் என்றால் அப்ப அவருக்கும் இவருக்குமான தொடர்பு என்னவாக இருக்கும்? இதுதான் சிலரது வம்பளப்பு.

இதற்கெல்லாம் சேர்த்துதான் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். எப்படி? ஒரு நடிகைக்காக மூன்று கோடி ரூபாய் செலவு செய்கிற அளவுக்கு நான் கோடீஸ்வரன் கிடையாது. இந்த படத்தின் டைரக்டர் நவீன் என்னோட அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அவருக்காகதான் நான் இந்த படத்தை வாங்கியிருக்கிறேன். மற்றபடி சொல்லப்படுகிற அத்தனையும் கப்சா என்கிறார். நிஜமாக இருப்பின் அப்படியே ஆகட்டும்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பூஜா எங்கேயும் போகல…

பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது....

Close