கிரிக்கெட் வீரர் Bravo வும் கெட்டார்… – தமிழ்சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ்!

ஒரு பாடலுக்கு ஆடுகிற வித்தையை இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒதுக்கிவிட்டது தமிழ்சினிமா. ‘சித்திரம் பேசுதடி’ படத்திற்கு பிறகு, படம் எடுப்பதையே தள்ளி வைத்திருந்த தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு எடுக்கும் படம் ‘உலா’. ஒரு கலா ரசிகனாவும், ‘உலா’ ரசிகனாகவும் தன்னை இப்படத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த், பெரும் தொகையை செலவு செய்து பிரபல கிரிக்கெட் வீரர் பிரேவோவை ஆட வைத்திருக்கிறார். (நாளைக்குதான் இந்த ஷுட்டிங் ஆரம்பிக்குதாம்)

இந்த நல்ல செய்தியை நாலு பேரிடம் சொல்லி பெருமைப்படுவதை விட மீடியாவை அழைத்து சொன்னால் போதுமே! மேள தாள கச்சேரிகள் மட்டும்தான் இல்லை. மற்றபடி சகல ஆர்ப்பாட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பிரேவோவையே வரவழைத்து விஷயத்தை சொன்னார்கள். ‘உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி. பிரேவோ இங்கதான் இருப்பாரு. போட்டோ எடுத்துக்க விரும்புறவங்க தனித்தனியா எடுத்துக்கலாம்’ என்றார் பிஆர்ஓ நிகில் முருகன். அதற்கப்புறம் நின்ற நீண்ட க்யூவை பிரேவோ எதிர்பார்த்திருந்திருப்பார். ஏனென்றால் மைதானத்தில் அவரோடு கைகோர்க்க முண்டுகிற கூட்டத்தோடு ஒப்பிட்டால் இதெல்லாம் நத்திங்…

நானெல்லாம் வீடியோ கேம்ஸ்ல கிரிக்கெட்தான் ஆடுவேன். அதிலும் நாம் விளையாட போற கிரிக்கெட் பிளேயரை நாம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆப்ஷன் இருக்கும். பிரேவோவுக்கு மட்டும் இரண்டாயிரம் கட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் இரண்டாயிரம் கட்டி, பிரேவோவைதான் அழைத்துக் கொள்வேன். அப்படிப்பட்ட ரசிகனுடைய படத்தில் அவரே வந்து ஆடுகிறார் என்றால் அதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் என்றார் இப்படத்தின் மெயின் ஹீரோ விதார்த்.

சைட் ஹீரோக்களாக கோ அஜ்மல், முருகா அசோக், எங்கேயும் எப்போதும் வத்சன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதிகா ஆப்தே, காயத்ரி போன்ற அழகழகான ஹீரோயின்களும் படத்தில் இருக்கிறார்கள்.

‘முரண்’ என்ற படத்தை எடுத்து, ‘யாருப்பா அவரு?’ என்று ரசிகர்களை லேசாக தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ராஜன் மாதவ்தான் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் கங்ணம் ஸ்டைலில் ஆடப்போகும் பிரேவோ, அதில் சில ஸ்டெப்புகளை மேடையில் ஆடிக்காட்ட, பிரபுதேவா கெட்டார் போங்கள்… இந்த படத்தை அப்படியே சேப்பாக்கம் கிரவுண்ட்லயும் திரையிடுங்க… கூட்டம் பிச்சுக்கும்!

Cricketer Bravo to shake legs in Ula

He’s known for breaking into impromptu dance moves as much as he’s known for his exploits on the cricket ground. Dwyne Bravo, the West Indian cricketer and Chennai Super Kings’s all-rounder, is all set to make his debut in Kollywood. The young cricketer will be seen dancing to a special number in Muran director Rajan Madhav’s upcoming film, Ula. During the press meet the director introduced Bravo to the press who has won many hearts in a sample swing of his legs and body on the stage. Vidhart who was the hero for the film Ula, said that he was very happy that a renowned cricketer like Bravo shaking his legs for his film. He is likely to shoot for the number, composed by Rajan’s brother and music composer Sajan Madhav, in Chennai from 8th Oct. It will be a promotional number, and will be peppy and fast-paced. LV Srikanth, who’s producing the film, had approached Bravo through a common friend, and he was game to experiment with a Tamil song instantly.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உலா பிரஸ்மீட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் பிரேவோ ஆட்டம்

[nggallery id=22]

Close