கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “மானே தேனே பேயே”

கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பட நிறுவனம் தற்போது G.V. பிரகாஷ்  –  ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் என்ற படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து ஆரி கதாநயாகனாக நடிக்கும் “ மானே தேனே பேயே” என்ற படத்தையும் இந்நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.

“நெடுஞ்சாலை “ படத்தின் வெற்றிக்குப்  பிறகு இயக்குனர் கிருஷ்ணா  –  ஆரி இணையும் படம் இது.

கதாநாயகியாக   பிரபல நடிகை மோகனாவின் மகள் கீர்த்தி சுரேஷ்  நடிக்கிறார்.

மற்றும் சென்ராயன், மதுமிதா ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வசனத்தை  ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.

ஒளிப்பதிவு    –   எம்.எஸ்.பிரபு

யுகபாரதி, விவேகா, ஆகியோருடன் இயக்குனர் கிருஷ்ணாவும் பாடல் எழுதுகிறார்.

நடனம்    –    நோபல்

இசை   –     C.சத்யா  

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணா.

தயாரிப்பு    –  கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் .

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டோம்….ஏற்கெனவே நான் இயக்கிய “ சில்லுனு ஒரு காதல்” காதல் கலந்த குடும்பப் படம்.  “ நெடுஞ்சாலை” படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள்… ஆனால் “ மானே தேனே பேயே “ அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக  இருக்கும். காதலை கலந்து காமெடியாக படம் செல்லும்.

இந்த படத்திற்கு  கானாபாலா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பானது.

படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்குகிறது. சென்னை, அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று  ஒரே கட்டத்தில் முடிவடைகிறது என்றார்.

மேலும் கூடுதல் தகவலாக இன்றைய தலைமுறையினரின்  ரசனைக்கேற்ற படமாக “மானே தேனே பேயே “ இருக்கும் என்றார் இயக்குனர் கிருஷ்ணா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதவி இயக்குனர் கதாநாயகன் ஆனார் – மகேந்திர பூபதி இயக்கத்தில் “ நனையாத மழையே “

கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக...

Close