‘குக்கூ ’ உருவாக காரணமே ஷங்கர் சார்தான்! ராஜுமுருகன் பிளாஷ்பேக்…
‘குக்கூ’ படம் விருதுகளை ‘கு(வி)க்கூ’ம் படமாக இருக்குமா என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் ஆர்வத்தோடு காத்திருக்க, ‘பொட்டி நிரம்புச்சா’ என்று கலெக்ஷன் மீதே கண் வைத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். எல்லாவற்றும் விடை சொல்லும் விதமாக நேற்று குக்கூ படத்தின் சக்சஸ்மீட் நடந்தது. படத்தின் இயக்குனர் ராஜு முருகன், தனக்கேயுரிய வெள்ளந்தி சிரிப்போடு மைக்கை பிடித்தார். தினேஷ், மாளவிகா, சந்தோஷ் நாராயணன் என்று மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த தருணம் அது.
ஆக்சுவலா நான் வேறொரு கதையைதான் என்னோட முதல் படமாக்கணும்னு நினைச்சிருந்தேன். கொஞ்சம் வணிக ரீதியான பார்வையுள்ள படம் அது. பட், ஷங்கர் சாரிடம் கதைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது உங்களுடைய முதல் படைப்பு வேற மாதிரி இருக்கணும் என்று கூறினார். இந்த குக்கூ கதை அவருக்கு பிடித்திருந்துச்சு. அதற்கப்புறம் இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எந்த சமரசமும் வேண்டாம். அப்படியே எடுங்கன்னு சொன்னாங்க. எந்த விதத்திலும் அவங்க தலையீடு இல்லாமலிருந்ததால்தான் என்னால இப்படியொரு படம் கொடுக்க முடிஞ்சுது என்றார் ராஜு முருகன்.
படத்தில் இளையராஜாவின் இசையை அதிகமா பயன்படுத்தியிருக்கீங்க, அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே என்ற இன்னொரு கேள்விக்கு, காற்று முழுக்க ராஜா சார்தான் நிரம்பியிருக்காரு. அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல முடியாது. ஏன்னா நம்ம கூடவே இருக்கிறவருக்கு எப்படி தனியா நன்றி சொல்ல முடியும்? இன்னொன்னு… வீட்டு விசேஷத்துல விருந்தாளிங்க எல்லாரையும் விழுந்து விழுந்து கவனிப்போம். தகப்பனை மறந்துருவோம். அந்த மாதிரிதான் இதுவும் என்றார். பொய்யில்லாத உணர்வு பூர்வமான பதில்தான் அது.
ராஜுமுருகனுக்கு தயாரிப்பாளர் சார்பில் ஒரு டஸ்டர் காரும் பரிசளிக்கப்பட்டது. ஒரு படம் தியேட்டருக்கு வந்தபின்பு நீ யாரோ? மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி முடிவதற்குள் இன்னொரு ஆச்சர்யத்தையும் கேட்க நேர்ந்தது நமது காதுகள் செய்த புண்ணியம். படத்தின் நாயகி மாளவிகா நாயர் இப்போதுதான் பத்தாம் வகுப்பு பரீட்சையே எழுதியிருக்கிறாராம்.
ஹை… கேரளா!
It is director Shankar who advised me to make Cuckoo – Raju Murugan
Cuckoo is creating sensation amongst the audience and film fraternity as well, hoping that the film would bring in few National awards. The success meet of the film was held on 26th March. The cast and the crew along with director Raju Murugan and the producers have participated with full vigour and enthusiasm.
Speaking on the occasion the director Raju Murugan has said that he originally planned a commercial film as his debut film, but it was director Shankar who advised him to be different in his debut film and suggested to do Cuckoo film, as he liked the script. When he approached producer he too agreed to do produce the film, said the director. He also has revealed that the producer has not intervened in any matter during the making of the film.
When asked why Ilayaraja’s name was not thanked Raju Murugan has said, “During the function we used to be focussed and attentive to guests while we miss our own father, it is similar to that” reasoned out the director.
The producer of the film has given SUV Duster as his compliments for the success of the film, to the director, during the function. It was also heard that Malavika Menon who acted in the film had just completed writing her X Std examinations.