குடைச்சல் கொடுத்த தம்பிக்கு தேவயானி தந்த மன்னிப்பு

ஃபெப்ஸி குண்டர்கள் புகுந்து குழப்பியதால் பிரசாத் லேப் உள்ளே நடந்த ‘ஆதியும் அந்தமும்’ பாடல் வெளியீட்டு விழா பற்றி எழுதமுடியாமல் வேறு ஏதேதோ எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் பத்திரிகையாளர்கள். சற்று தாமதமானாலும் நிகழ்ச்சி குறித்த சில தகவல்கள் இங்கே.

தமிழ்நாட்டையே டெலிகாஸ்ட் நேரத்தில் ஆ வென்று வாய் பிளக்க வைத்த ‘கோலங்கள்’ சீரியலில் தேவயானிக்கு குடைச்சல் கொடுக்கிற வில்லனாக நடித்து ஊர் சாபத்தையெல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் அஜய். சீரியலில் இவரது பெயர் ஆதி. அந்த பெயர் சென்டிமென்ட்டாக கூட இருக்கலாம். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘ஆதியும் அந்தமும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கியிருப்பவர் அஜய் மாதிரியே சீரியலில் நடித்து வரும் கௌசிக். ‘பனிவிழும் நிலவு’ என்ற இன்னொரு படத்தையும் இவர் இயக்கி முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கிறார். இந்த ஆதியும் அந்தமும் படம் ஒரு க்ரைம் த்ரில்லர்.

பொதுவாக படத்தில் நடிக்க வந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த படம் வெளியாகவில்லை என்றால், மீண்டும் சீரியலில் தலையை காட்டி சில்லரையே தேற்றுவது நடிகர்களின் இயல்பு. ஆனால் இனி காலை பின்னோக்கி வைப்பதாக இல்லை என்று பிடிவாதமாக காத்திருக்கிறார் அஜய். உங்கள் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே வாழ்த்தினார்கள் பலரும். அதிலும் சீரியலில் இவரிடம் போராடி களைத்துப்போன தேவயானி, ரொம்ப ஃபிரஷ்ஷாக வந்திருந்தார் இந்த விழாவுக்கு. என்னோட தம்பி அஜய். அவரு நடிக்கும்போதே எனக்கு தெரியும், சினிமாவில் அவர் என்ட்ரியான பெரிய இடத்தை பிடிப்பார்னு. நிச்சயம் அவருக்கு ஆண்டவன் அந்த நல்ல இடத்தை கொடுப்பான் என்றார் மனதார.

விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கெஸ்ட், டைரக்டர் வெற்றிமாறன். கதை நேரம் சீரியல் எடுக்கும் போது அந்த கதை விவாதத்தில் கௌசிக்கும் கலந்து கொள்வாராம். அப்பல்லாம் பேசவே மாட்டார் அவர். ஆனால் அவர் இரண்டு படங்களை இயக்கி முடிச்சிட்டார்ங்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு என்றார் அவர்.

படத்தை பார்த்த பின்பும் அதே ஆச்சர்யம் தொடர வேண்டும். அதுதான் நல்லது…

Aadhiyum Andhamum audio release

The audio release of Aadhiyum Andhamum was held on 12th Feb. when FEFSI mob clashed with the organisers which we had already reported.

The audio release event was attended by Devyani and director Vetrimaran along with cast and crew of the film.

Speaking on the occasion Devyani prophecied that Ajay would become a successful star in film industry for his hard work and talents. Director Vetrimaran has said that the director Kaushik who participates in the story discussions will never speak then. He was surprised to learn that he had successfully directed two films and appreciated his talents.

Ajay who is the TV artiste famous for his villainous role in Kolangal opposite to Devyani will be debuting as hero with Aadhiyum Andhamum. Ajay said that he is determined to make it big in films and will not go back to small screens, was appreciated by the audience.

The film is a crime thriller directed by Kaushik, who has already directed a film Pani Vizhum Nilavu, which is ready for release.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மறைந்தார் பாலுமகேந்திரா கண்ணீரில் திரையுலகம்…

  Veteran director and pioneer of Indian Cinema Balu Mahendra passed away The 74 year old veteran director was amongst...

Close