குத்துங்க எசமான் நல்லா குத்துங்க…

எங்கோ மச்சமில்லாமல் இப்பயெல்லாம் நடக்காது… இப்படிதான் யோசிக்க வேண்டியிருக்கிறது சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்டத்தை நினைத்தால். அவர் சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டார்…. கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்… வந்த கொஞ்ச நாளிலேயே ஆடி கார் வாங்கிவிட்டார்… அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்… நாம் சொல்ல வந்தது இதெல்லாம் இல்லை. வேறொன்று. அது?

காப்பியடித்து படம் பண்ணுகிற எல்லாரும் அது காப்பி என்று தெரிந்தாலும் தப்பிப்பது எப்படி தெரியுமா? அதே காப்பியை மற்றவர் அடித்து, அதுவும் இதுவும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களை சந்தி சிரிக்க விடுகிறதே? அப்படியெல்லாம் நடக்காதபோது. அப்படி தப்பி வந்த மகராசனாகிவிட்டார் சிவா. அவர் தற்போது நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். க்ளைமாக்சில் ஒரு தாறுமாறான பைட்டும் இருக்கிறதாம் அவருக்கு. இதை கண்ணுறும் சிவாவின் ரசிகர்கள் தேன் குடித்த எபெக்டிற்கு தள்ளப்படுவார்கள். இருக்கட்டும்…

அதே நேரத்தில் ‘மான்கராத்தே முந்திகிச்சே’ என்று பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள் ஜெயம் ரவியும், ஜீவாவும். காரணம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி குத்துச்சண்டை வீரராக வருகிறாரோ? அதே மாதிரிதான் பூலோகத்தில் ஜெயம் ரவியும், யான் படத்தில் ஜீவாவும் வருகிறார்கள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் மான் கராத்தேவில் சிவகார்த்திகேயனின் குத்து சண்டையை ரசிப்பவர்கள், அடுத்தடுத்த ஹீரோக்களின் குத்து வரும்போது மட்டும் இதே வேலையாப் போச்சுப்பா இவய்ங்களுக்கு என்று அலத்துக் கொள்ளாமலிருக்க வேண்டும்.

மற்ற இரு படங்களும் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் ரசிகர்கள்தான் இந்த தொடர் குத்தை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஹ்ம்ம்… குத்துங்க பார்க்கலாம்…

Siva Karthikeyan’s Maan Karate gives night mares to Ravi and Jiva?

Siva Karthikeyan must be enjoying his date with destiny for sure. As otherwise, how would it be possible for him to have the effect that whichever he touches turns ‘gold’? We write only to wonder on his success and nothing beyond.

We have learnt that from romantic and rustic hero, Siva is slowly upgrading himself to an action hero (of course that is his strategy). In his upcoming film Maan Karate he will be seen as a ‘boxer’ and has some good fighting effects to please his fans. We also hear that in the climax of the film he has done some wonderful fights which will sure to thrill the audience.

However while the audience and his fans would be happy to Siva doing boxing, there are two souls who are now worried about the fate of their films. While in Boologam Jayam Ravi dons a boxer’s role, in Yaan Jiva will be playing a boxer. In cinema history whichever film that comes first telling a different story will have monopoly right which the audience will confer, and those films that come later with similar background may not get thumbs up from the audience. It is this dilemma which makes Jayam Ravi and Jiva worried on the fate of their films. One cannot have any say on destiny, right?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
KANNAKKOL STILLS

[nggallery id=365]

Close