கும்கியில் வாழ்வு. ஜில்லாவில் ‘வாய்வு?’ எரிச்சலில் ஜோ மல்லுரி

கும்கி படத்தில் எல்லாரையும் நடிப்பால் வியக்க வைத்தவர் கவிஞர் ஜோ மல்லுரி. அதற்கப்புறம் அவரை தேடி தேடி வாய்ப்புகள் வந்த போதும் நல்ல படம் வந்தால் நடிப்போம். இல்லேன்னா கவிதை எழுதுவோம் என்று சும்மாயிருந்துவிட்டார். ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் அவர் எழுதும் புத்தகத்தின் நேர்த்தியை விட, அந்த புத்தக விளம்பரத்திற்காக அவர் வைக்கும் விதவிதமான கட் அவுட்டுகள் கலக்கும்.

முன்பெல்லாம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் அவரது ஸ்டால், அவர் நடிகராகிவிட்ட பின்பு களை கட்டி வருகிறதாம். சில நேரங்களில் ஸ்டாலில் உட்கார்ந்து ஆட்டோகிராஃப் போட்டு அமர்க்களம் செய்து வரும் அவருக்கு சொந்தக்கதை சற்றே சோகக்கதை. வேறொன்றுமில்லை, கும்கிக்கு பிறகு அவர் நடித்த ஜில்லாதான் அந்த சோகக்கதை. முதலில் கதையை கேட்காமலே ஒப்புக் கொண்டாராம் அவர். காரணம்? அது விஜய் படமாச்சே! ஆனால் இவரை இங்க நில்லுங்க… அங்க நில்லுங்க. சுவற்றை பார்த்து லேசா முறைங்க… என்று கூறியே இவரது கேரக்டரை முடித்துவிட்டார்கள்.

இப்படி கூட்டத்துல கோஷம் போட்ற கேரக்டர்ல நடிக்க வச்சுட்டாங்களே என்று நொந்தே போன ஜோ… அச்சச்ஜோவாகிவிட்டார். நம்மளே களத்துல இறங்கலேன்னா ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டா ஆக்கிப்புடுவாங்க என்று நினைத்தவர் சொந்த படம் எடுக்கப் போகிறாராம். இவரே தயாரித்து இயக்கி நடிக்கவும் போகும் இந்த படம் ஜோ மல்லுரியை ஒரு முழு நடிகராக்கும். இதை அவர் நம்புகிறாரோ இல்லையோ? நாங்க ரொம்பவே நம்புறோம் கவிஞரே…

Poet Joe Malluri plans to produce, direct and act in his own film

Poet Joe Malluri was flying high after the success of Kumki as his work was much appreciated. His stature increased thereafter which slowly led him to accept his next film, Vijay starrer Jilla. However he is cursing his stars as to why he agreed to the film, as he was not given any importance in the film nor given proper respect in the sets. Not cowed down by such acts, he wanted to return to Kollywood with a vengeance. He is now planning to produce and direct a film on his own and act in it as well. We hope he would be in a position to expose his potential and talents more authoritatively.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மதுரக்கார பொண்ணோட துணிச்சல்!

தமிழ்சினிமா பெண் இயக்குனர்களின் லிஸ்ட் சற்றே குட்டையானதாக இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரின் வேகம் ஆண்களுக்கு சளைத்ததல்ல. நடிகை பானுமதி நல்ல உதாரணம். அதற்கப்புறம் வந்த பெண்...

Close