குறும்பட இயக்குநர்களின் சினிமா கனவு தகர்கிறதா? – முருகன் மந்திரம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது பல புதிய, புதிய அலைகள் உருவாகும். பின் அந்த அலை இன்னொரு அலையில் அப்படியே காணாமல் போகும். அல்லது அந்த அலையே தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.
அப்படி சமீபத்தில் உருவான ஒரு புதிய அலை தான் குறும்பட இயக்குநர்களின் அலை. ஏதாவது ஒரு குறும்படத்தை எடுத்து சின்னத்திரை நிகழ்ச்சியில் பிரபலமாவது, அதன் மூலமாக நேரடியாகவே பெரிய திரைக்குள் இயக்குநராக பிரவேசிப்பது. அல்லது யூட்யூபில் ஒரு குறும்படத்தை எடுத்து அப்லோட் செய்து, அது பாப்புலராகி விட்டால் அப்படியே பெரிய திரைக்குள் பிரவேசிப்பது. அப்படி முதன்முதலாக “காதலில் சொதப்புவது எப்படி?” படத்தின் வழியாக பெரிய திரைக்கு வழிகாட்டியவர் பாலாஜி மோகன். அந்த படம் ஆஹா ஓஹோ வென சொல்லும்படி இல்லையென்றாலும் இந்த குறும்பட இயக்குநர்களின் வரிசையை ஆரம்பித்த முதல் அலை என்ற பெருமையை எடுத்துக்கொண்டது.
தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான “பீட்சா” பரவலாக பெரிய வரவேற்பைப் பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்தது. கதைக்கருவையும் கதை சொன்ன விதத்தையும் விடவும் படத்தின் மேக்கிங் வகையில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது பீட்சா.
பீட்சாவைத் தொடர்ந்து வந்த “சூது கவ்வும்” ஆஹா ஓஹோவென கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது. கதைநாயகன் விஜய்சேதுபதியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த படங்களில் ஒன்றானது. இயக்குநர் நலன் குமாரசாமி எடுத்துக்கொண்ட கதைக்கரு, கதையின் முக்கிய கதாபாத்திரங்களின் வித்தியாசமான சித்தரிப்பு என்பதிலேயே பெரிதும் ரசிக்க வைத்துவிட்டார். தவிரவும் சுந்தர்.சி இயக்கிய “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்திலும் நலன் குமாரசாமி முக்கிய பங்காற்றினார்.
இந்த வரிசையில் இதற்கு அடுத்து வந்த அனைத்து படங்களுமே பெரிய தடுமாற்றத்தையே சந்தித்தன. அதோடு இந்த வரிசையை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேலையையும் செய்தன என்று சொல்லலாம்.
“பீட்சா 2” என்ற சம்பந்தமே இல்லாத சப் டைட்டிலோடு வெளியான “வில்லா”விற்கும் பீட்சாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே அந்த படத்தின் கனத்தை குறைத்தது.
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதி பாலகுமாரன் இயக்கிய “விழா” திரைப்படம், எதிர்பார்ப்பில் கால்வாசி அளவு கூட நிறைவேற்ற முடியாமல் விழாக்கோலத்தை கலைத்துக்கொண்டது. பாரதி பாலகுமாரனால் எடுக்கப்பட்ட “உதிரி” குறும்படமாக பெரிய வெற்றி பெற்ற விழா தான் வெள்ளித்திரையில் திரைப்படமானபோது உதிரியானது.
அதைப்போலவே “கல்யாண சமையல் சாதம்” திரைப்படமும் எல்லோராலும் ருசிக்கப்படாமல் போனது. ஒரு தரப்பினரால் சிரித்து ரசிக்கப்பட்டாலும் இன்னொரு தரப்பினர் முகம் சுழித்து, அய்யோ என்றனர். அதோடு கல்யாண சமையல் சாதத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களமும் மாந்தர்களும் ஒரு குறிப்பிட்ட தரப்பினராக இருந்ததும் அந்தப்படம் அனைத்து தரப்பினரால் ரசிக்கப்படாமல் போனதற்கு ஒரு காரணமாக அமைந்தது,
சமீபத்தில் வெளியான “உ” திரைப்படமும் ஒரு சுழலுக்குள் சிக்கி நின்றது. தம்பி ராமையா கதாநாயகனாக நடிக்கிறார் என்பதன் காரணமாகவும் படத்தின் பெயர் காரணமாகவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உ அமைந்தது. ஆனால், மிக மிக சொற்ப அளவினரால் வித்தியாசமான படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் மிச்சமுள்ள அத்தனை பேரையும் என்ன படத்தைப்பற்றி என்ன சொல்வது என்ற குழப்பத்தில் தள்ளி விட்டது.
“பண்ணையாரும் பத்மினியும்” அதன் பெயருக்காகவும் முக்கிய கதாபத்திரங்களாக நடித்த விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், மற்றும் பத்மினி காருக்காகவும்  ஆரம்பத்தில் இருந்தே ஆரவாரமாக எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. விழா போலவே இந்த படத்தையும் ரசிகர்களும் விமர்சகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், படம் வெளியான அடுத்த நாளில் நீளத்தை குறைத்திருக்கிறோம் என்று சொல்ல வைத்த படங்களில் ஒரு படமாக அமைந்தது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.
மொத்தத்தில் சமீபத்திய வரவுகளான விழா, உ, பண்ணையாரும் பத்மினியும் இந்த மூன்று படங்களுமே எடுத்துக்கொண்ட கதைக்களத்திலும், கதைக்கருவிலும், கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்விலும் சோடை போகவில்லை. ஆனால், திரைக்கதை என்ற ஆணிவேரை பற்றி அவ்வளவாக சிரத்தை எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதுபோலவே முக்கிய கதாபாத்திரங்களின் கதாபாத்திர சித்தரிப்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் தனித்தனியாக துண்டு துண்டாக பார்த்தால் ரசித்து கொண்டாட முடிகிற பல காட்சிகளை படத்தோடு சேர்த்து பார்க்கும்போது துண்டாகவே நிற்கிறது.
அட்ட கத்தி தினேஷ், மகள் நீலிமா ராணி, பீடை பால சரவணன், மெக்கானிக் போன்ற துணைக்கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த இயக்குநர், முக்கிய கதாபாத்திரங்களான பண்ணையார், பண்ணையார் பொண்டாட்டி, டிரைவர், பத்மினி கார், ஊர் மக்கள் இவர்களை போகிற போக்கில் சொன்னாலே ரசிகன் புரிந்து கொள்வான் என்று நினைத்திருப்பார் போலும்.
பண்ணையாருக்கும் அந்த காருக்குமான உறவில்
டிரைவருக்கும் அந்த காருக்குமான உறவில்
பண்ணையாருக்கும் பொண்டாட்டிக்குமான காதலில்
டிரைவருக்கும் பண்ணையாருக்குமான உறவில்
பண்ணையார் பொண்டாட்டிக்கும் காருக்குமான உறவில்
ஊர் மக்களுக்கும் காருக்குமான உறவில்
எந்த நெகிழ்ச்சியான சம்பவங்களும் இல்லை, லீட் என்று சொல்லப்படுகிற முன் சித்தரிப்புகளோ, அல்லது ப்ளாஷ் பேக் கதையோ இல்லை. இத்தனைக்கும் அந்த திரைக்கதையில் நெடுநேரத்திற்கு கார் இன்னொருவரின் உரிமைப்பொருளாகவே இருக்கிறது. எந்தவிதமான கனமான உறவு செண்டிமெண்ட் சித்திரிப்புகளும் இல்லாமல் கார் மீது கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் பாசத்தைக் அள்ளிக்கொட்டி புலம்ப என்ன காரணம் என்று புரியாமல் குழம்பியபடியே பார்க்கிறான் ரசிகன்.
இதைப்போலவே, உ திரைப்படமும். தமிழ் சினிமாவின் தலைநகரான கோடம்பாக்கத்தின் நிஜமாக நிகழ்வுகளை காமெடியாக சொல்லிவிட நினைத்த உ காமெடியாக ஆகியிருக்கிறது. தம்பி ராமையா என்கிற கமர்சியல் என்ஜின் இருந்தாலும் திரைக்கதை என்ன சொல்ல வருகிறது என்பதில் தெளிவும் அனுபவமும் இல்லாமல் விளையாட்டுத்தனமான காட்சிகளின் தொகுப்பாகி விட்டது உ. நாகேஷ்-ன் “ஓகோ புரொடக்சன்ஸ்” முழு நீள படமாக வந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நகைச்சுவை சித்திரமாக அமைந்திருக்க வேண்டிய உ, திசை மாறிவிட்டது.
விழாவும் அப்படியே, கதைக்களத்தை மட்டும் புதுமையாக எடுத்துக்கொண்ட இயக்குநரால் கதையை, கதை மாந்தர்களை, திரைக்கதையை வித்தியாசமாக சித்தரிக்க தெரியாமல் திணறிவிட்டார்.
குறிப்பிட்டுள்ள 3 படங்களுமே மாறுபட்ட கதைக்களம், கதைக்கரு என்ற வகையில் கவனிக்க வைத்தாலும் திரைக்கதை என்ற ஆணிவேர் பற்றி அவ்வளவாக சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்பது புரியும். அதோடு இந்த 3 படங்களுமே இடைவேளைக்கு பின்னும் வேறு எங்கு செல்வது என்று புரியாமல் திரைக்கதை மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.
ஆக இந்த 3 படங்களின் நிலை குறும்பட இயக்குநர்களின் அலையை திசை மாற்றி விட்டதாகவே தோன்றுகிறது. திரைக்கதை என்கிற ஆகப்பெரிய வித்தைக்கும் குறும்படம் என்கிற சில நிமிட கவன ஈர்ப்புக்கும் உள்ள தூரம் மிக மிக நீளமானது என்பதை நிருபீக்கிற படங்களாகவும் இந்த படங்கள் அமைந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
கதை விவாத அனுபவம், உதவி இயக்குநராக கள அனுபவங்கள்… போதிய அளவில் இல்லாமல் சில நிமிட குறும்படங்களை திறமையாக எடுத்துவிட முடிகிற எல்லோராலும் வெள்ளித்திரையில் கோலோச்சி விட முடியாது என்பதற்கும் அந்த அனுபவம் போதாது என்பதற்கும் இந்த திரைப்படங்கள் சான்றாக அமைந்துவிட்டன. ஆனால் அதற்காக முடியாது என்றும் சொல்வதற்கில்லை. கடுமையான உழைப்பும் தேடுதலும் உற்று கவனித்தலும் தற்கால சினிமா பற்றி புரிதலும் இருந்தால் ஜெயித்துவிட முடியும்.
இந்த பட்டியலில் பாலாஜி மோகன் தனது இரண்டாவது படமாக “வாயை மூடி பேசவும்” படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் சூப்பர் ஹிட் இயக்குநர் ஃபாசிலின் வருங்கால மருமகள் நஸ்ரியா இருவரையும் இந்த படத்தில் ஜோடி சேர்த்திருக்கிறார் பாலாஜி மோகன். கார்த்திக் சுப்புராஜின் இரண்டாவது படம் “ஜிகர்தண்டா” கிட்டத்தட்ட ரெடி. நலன் குமாரசாமி மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.
இந்த வரிசையில் வெளிவர உள்ள படங்களாக தெகிடி, முண்டாசுப்பட்டி, சிக்கிக்கு சிக்கிக்கிச்சு, காக்கா மூட்டை போன்ற படங்கள் அறியப்படுகின்றன.
எதைக் கற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் ஆர்வம் தான் முதல்படி, ஆனால் அந்த ஆர்வம் மட்டுமே போதுமானது அல்ல. ஆர்வத்தோடு அனுபவமும் பயிற்சியும் கண்டிப்பாக தேவை. அப்படி அனுபவம் இல்லை என்றாலும் சினிமாவைப்பொறுத்தவரை அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலோடு தெளிவாகவும் கடுமையாகவும் உழைப்பவர்கள் வெற்றியை ருசிக்க முடியும், தன்னம்பிக்கையின் அளவைவிட கடுகளவு தலைக்கனம் கூடினாலும் வெற்றி அவர்களை விட்டு விலகியே நிற்கும் என்பது எக்காலத்திலும் வரலாறு.
பின்குறிப்பு: சேகரித்த விவரங்களின் படி உருவாக்கப்பட்ட கட்டுரை, தகவல்கள் விடுபட்டிருந்தால், தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Is it the beginning of end of small budget films? – An analysis.

Tamil cinema has seen ‘new wave’ several times during its tenure and currently is in the grips of another wave ‘small budget films’, thanks to the short film makers and those who have potential interest in film making. Since the time Sasikumar forayed into films from distribution, with his evergreen Subramanyapuram, small budget films are enjoying their never seen success in Kollywood. While it is a welcome to see several young brains thrive and flourish we find of late monotony setting in, which make us fear, ‘have we peaked so soon’? The fear is due to decline in such films not in numbers but in quality.  

We make an analysis of the inputs available with us on the current trend.

Sasikumar and Samuthirakani started the small budget films in a very positive way with Subramanyapuram. There are many films that tasted success, but we are not identifying them to limit it to the subject of discussion. This has been continued with fairly good amount of success rate with subsequent films, though it cannot be said the same the films that are currently released or to hit the screens soon.

The small budget films get a boost when Balaji Mohan who uploaded his short film of the same name, made it into a film and tasted success. Though the story line is not novel, the presentation and captured the out of the box thinking of the director. Balaji Mohan showed the way for many young director aspirants to make a short film and foray in to the big screens, some with success and some with disaster. But a way was found which was well utilised by the young talents.

Balaji Sakthivel, Nalan Kumarasamy, Karthik Subburaj, Saravanan, Ranjit, and several others who have successfully utilised the trend and made a mark for themselves in the industry. It has also helped new producers to come into the film making, though they because of lack of experience in film making they put to lot of hardship, which is another story.

However we see a decline of late in such films as the audience are not willing to accept anything and everything the film makers offer. Barring for Goli Soda and Pannayarum Padminiyum and to an extent Kalayana Samayal Sadham, many films tanked without a trace, despite a good story line.

In Goli Soda, Vijay Milton brought freshness in the film which was gladly embraced by the audience to make it a soaring hit. Though the story is very simple and age old, the screen play and the characters did the trick for the film. In Pannayarum Padminiyum there is no story as such but the situational characters and the sentiments common man practices over his pet things, established the connectivity with the audience and hence thrived. Kalayana Samayal Sadham is certainly a new wave film which has out of box thinking by director and boldly acted by Prasanna, is set for a particular genre of audience and hence it resulted in limited success.

When it comes to other films – we are not naming any film here as most of the films fall in the same category – which bombed at the box office, the main reason for non acceptance by the audience in the mediocrity and lack of screen play or presentation, despite a good and novel story line. It is because there is no reality check or visualisation by the film makers and/or lack of experience in big screen formats. There is a sea of difference between making a short film and a feature film, like that of a cult film and a commercial film. Plenty of inputs and thought process are needed to make such a film to make is acceptable by critics, leave alone audience. Bala and Mysskin films are honoured despite with negligible financial success purely based on their presentation skills and novelty. You cannot become Bala or Mysskin overnight, but sustained thinking of creating a value or brand image for self will help the young film maker to be in the reckoning.

We will have to wait see if Nalan Kumarasamy, Karthik Subburaj and the like are no one time wonders but real assets to Kollywood. We wish the young minds and talents thrive for some more years before a ‘new wave’ sets in Kollywood. And with this aspiration we end the story with a positive outlook for them.

– NaSu

(With inputs from  Murugan Mandhiram)

 

2 Comments
  1. Ravikumar says

    I object u brother…

  2. mohamed kasim says

    http://islamindia.wordpress.com/ இணைய தளத்தில் நான் கண்ட ஒரு விவாதம் …
    நஞ்சுண்டமூர்த்தி சொல்வதென்னவென்றால்:
    2:32 முப இல் பிப்ரவரி 13, 2014
    அண்ணா, உங்களுக்கு மேல நான் அவாள ரொம்ப வெறுத்தேன். கேலி செஞ்சேன். ஒரு தடவை The Message எனும் படத்தை பார்த்தேன். யாரோ பளார்னு கன்னத்தில அறைஞ்ச மாதிரி தோனிச்சு. எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு.
    முஹம்மத்(ஸல்) யார்? . 170 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவினரென்பது இப்படத்தை பார்த்தால் புரியும்.
    https://www.youtube.com/watch?v=1jKLF43MR-g

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சும்மா கிடந்த சங்கை ஊத நினைத்து ஒன்றரை கோடி நஷ்டம்! அதிர்ச்சியில் விஜய் சேதுபதி

‘சிவனே’ன்னு போனாலும், ‘மவனே’ன்னு கூப்பிட்டு வம்பிழுக்குமாம் விதி. அப்படியொரு சிக்கலில்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே வசூலில் காலை வாரிவிட்டிருக்கிறது....

Close