கூப்டுருவாங்களோ…? கையை பிசையும் கைப்புள்ள?
சிரிக்க வச்சமா, சிந்திக்க வச்சமான்னு இல்லாம லேசா அரசியல் பக்கம் போனதன் விளைவை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அதன் தொடர்ச்சிதான் இது. ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் முடிவுக்கு வந்துவிட்டது. காப்பி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில் வெளியிட்டு விடலாம் என்றெல்லாம் அந்த படத்தை பற்றிய ஸ்கெட்ச் தயாரிப்பாளரால் தயாராகிக் கொண்டிருக்க, வடிவேலுவுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஸ்கெட்ச் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம். அண்ணாச்சி.. ஒரு தடவ வந்துட்டு போறியளா? என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம் வடிவேலுவை.
போனால் என்னாகும் என்பது அவருக்கு தெரியாததல்ல. ஆனால் போகாமலும் இருக்க முடியாதே? அழைத்தவர்களின் வேல்யூ அப்படி.
இந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினை மட்டும் பிடி பிடியென பிடிக்கும் முதல்வர் ஜெ. விஜயகாந்த் பற்றி பேசுவதேயில்லை. அவரை பற்றி நாம் பேசுகிற அளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று அவர் நினைப்பதால்தான் இந்த முடிவு. ஆனால் விஜயகாந்த்தை வெளுக்காமல் விடவும் முடியாதே? அதற்காகதான் தோதான ஆளை தேடிக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சி. விஜயகாந்த் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே ஒரு பிரபலத்தை அனுப்பலாம் என்று தேர்தல் வியூகம் வகுக்கிறதாம் ஆளுங்கட்சி. சரத்குமாரை அனுப்பலாம் என்றால், அவரோ தனது மனைவிக்கு சீட் தரப்படவில்லையே என்கிற வருத்தத்திலிருக்கிறாராம்.
விஜயகாந்த் மீது ஆத்திரமுள்ள, அதே நேரத்தில் கூட்டத்தை அதிரி புதிரியாக திரட்டக்கூடிய வல்லமை யாருக்கு இருக்கு என்று யோசித்தால் படக்கென்று மனசுக்குள் வருபவர் வடிவேலுதான். ‘எந்த நேரத்திலும் உங்களுக்கு அழைப்பு வரும். தயாராக இருங்க’ என்று தாக்கீது வந்திருக்கிறதாம் கைப்புள்ளைக்கு.
அவ்வ்வ்வுன்னு பம்மறதா, அம்மா…ன்ன்ன்னு கெஞ்சுறதான்னே தெரியாம பேஸ்த் அடிச்சு கிடக்கிறாராம் வடிவேலு.
Vadivelu is in delicate situation, with elections nearing?
Vadivelu has learnt the bitter lesson of his life, by participating in the previous election since he had a steep decline in work and money after the elections. After suffering for couple of years he is working now with full vigour for his comeback film ‘Tenaliraman’. The shooting is wrapped up and the makers are busy with other works to release the film soon. Vadivelu is banking on the film to resurrect his lost place in Kollywood.
Meantime, elections to Parliament has been announced with political parties vying with each other to score points while at the same time to provide glamour to the people. Many parties have lined up stars for the purpose. Vadivelu this time, showed least interest and was focussed on his career. But that was not to be. Sources claim that he has been hinted to come to the party, to speak against Vijaykanth wherever he goes. The people who call him now are the ruling party and he cannot say ‘No’ to them. The ruling party has zeroed in on Vadivelu as he is the fierce opponent of Vijaykanth and also has an equal capacity to form big crowd.
Now Vadivelu has to take the call.