கெஸ்ட்ரோல் கொள்கை? பார்த்திபனுக்காக மாறிய விஜய் சேதுபதி

இனிமேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்பதை ‘ரம்மி’யிலேயே உணர்ந்திருப்பார் விஜய் சேதுபதி. அவரை வைத்துக் கொண்டே ரம்மி தோல்விப்படம் என்று விழா மேடைகளில் பேசுகிற அளவுக்கு நிலைமை முற்றிலும் மோசமாகிக் கிடக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே தனது பேட்டிகளில் இந்த படத்தில் நான் ஹீரோ இல்லை. இனிகோ பிரபாகர்தான் ஹீரோ என்றெல்லாம் கூறி வந்தார். அப்படியிருந்தும் படத்தில் இவரது கேரக்டர் இன்னும் வேறு மாதிரி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள் அவரது ரசிகர்கள். ஏன்? படத்தில் அவரை மண்டைய போட வைத்துவிட்டாரே இயக்குனர்? அதனால்தான்…

இனிமேல் கெஸ்ட் ரோல் செய்ய மாட்டேன் என்று தன்னை நாடி வருகிறவர்களிடம் திட்டவட்டமாக கூறிவிடணும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆனாலும், முன்பே கொடுத்த சில கமிட்மென்டுகள் அவரை துரத்தோ துரத்தென துரத்துகிறதாம். அதில் ஒன்றுதான் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்கிற படம். இதில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பார்த்திபன்.

ஒருகாலத்தில் தன்னை இம்ப்ரஸ் பண்ணிய ஹீரோ, வீடு தேடி வந்து கேட்கிறார். முடியாதுன்னு சொல்ல முடியாதே? சரி என்று ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. ரம்மிக்கு பிறகு தனது கெஸ்ட் ரோல் கொள்கையை அதிரடியாக மாற்றிக் கொண்டாலும், பார்த்திபன் படத்தில் விஜய் சேதுபதி இருப்பார் என்கிறார்கள். ஏனென்றால் வாக்கு கொடுப்பதை ஏதோ பாக்கு கொடுப்பதை போல பாவிப்பவரல்ல விஜய் சேதுபதி, அதனால்தான்…

Vijay Sethupathi to avoid playing ‘guest’ roles!

Vijay Sethupathi’s position of reigning hero in Kollywood has dampened a bit now due to ‘gross’ failure of his recent film ‘Rummy’. Despite saying he has done the film for his ‘friend’ Inigo Prbhakaran, and Inigo is the hero of the film, his fans and the audience are not willing to accept the film. Having received the mild jolt in his upcoming career, Vijay Sethupathi has become wise now. Henceforth, he would not be accepting any ‘guest’ role in any films. However he has made an exception to the rule. Since he had committed to R. Parthieban’s film Kathai, Thiraikkadhai, Vasanam, Iyakkam, to play a guest role, he cannot go back on his word. Also Parthieban was once his star actor who made a personal request to Vijay to play a guest role in the film.

Playing ‘guest’ role is not a problem, but accepting the ‘guest’ role without thinking of the depth of the character, is the problem. Vijay has learnt this very bitterly now.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘நான் எங்கயும் ஓடுறதா இல்ல…’ எரிச்சலில் ஜனனி அய்யர்!

தமிழ்சினிமாக்காரர்களின் திடீர் தமிழ் மோகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. மீகாமன், தெகிடி என்றெல்லாம் பெயர் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். (ஏதோ தெலுங்கு படமாம்ல என்று ரசிகர்கள் குழம்பி பின்பு சகஜநிலைக்கு...

Close