கைகழுவிய டைரக்டர், கைகொடுத்த கமல்! -ரிட்டர்ன் பேக் அபிராமி…
ஒருகாலத்தில் ரசிகர்களை அபிராமி… அபிராமி என்று புலம்ப வைத்த நடிகை அபிராமி முன்னணியில் இருக்கும் போதே பின்னணி தெரியாமல் காணாமல் போனார். அவரது அழகையும் நடிப்பையும் சொல்ல விருமாண்டி என்ற ஒரு படம் போதும். அதற்கப்புறம் வரிசையாக குவிந்த வாய்ப்புகள் எதையும் அவர் காதில் வாங்கிக் கொள்வதாகவே இல்லை. ஏன்? ‘அவருக்கு கண்ணாலம் ஆயுருச்சே…’ என்று காதை கடித்த அன்டர் கிரவுண்ட் அலசல் ஆசாமிகள், முன்னணி இயக்குனர் ஒருவரது பெயரை சொல்லி அவரது கஸ்டடியில்தான் இருக்கிறார் என்று மனசையும் கடித்து வைத்தார்கள்.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் அபிராமி. ஆனால் இவரோடு சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அந்த டைரக்டர் இங்கே வேறொரு அபிராமியுடன் அபிப்ராயம் கொண்டிருந்த தகவல் அவருக்கு போய் சேர்ந்திருக்கலாம்… சட்டுபுட்டென பெட்டியை கட்டிக் கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
முதல் வாய்ப்பை கொடுத்தவரிடம்தானே முறையிட முடியும்? மீண்டும் கமலிடம் சென்று முறையிட, விருமாண்டி புகழ் அபிராமியை விஸ்வரூபம் புகழ் அபிராமியாக்க முடிவு செய்துவிட்டார் அவரும். விஸ்வரூபம் பார்ட் 2 வில் அபிராமிக்கு முக்கியமான ரோல்.
முழுமதியை பார்க்க வெயிட் பண்ணிய அபிராமி பட்டர் மாதிரி, இவரை பார்க்க துடிப்பவர்கள் விஸ்வரூபம் வரும் வரைக்கும் காத்திருப்பதுதான் பெட்டர்!
Nalla seithi.
Mani Vannan பச்சைக்கிளியாக வலம் வரவேண்டியவர் முத்துச்சரத்தில் சிக்கி சிதறினார் …….