கைநீட்டி அழைக்குது காவிக் கட்சி ? சிக்காமல் பறக்குது விஜய் பட்சி

தேர்தல் களத்தில் தண்ணீர் தெளித்து ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘இதுல உங்க ரோல் என்ன?’ என்று நட்சத்திரங்களை நச்சரிக்கிற வேலையிலும் இறங்கிவிட்டது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும். ஓட்டை உடைசல் நடிகர்களுக்கே இதுபோன்ற நேரங்களில் ‘டிமாண்ட்’ அதிகமிருக்கும் போது விஜய் மாதிரி லட்சக் கணக்கான ரசிகர்களை கூட்டமாக சேர்க்கும் வல்லமையுள்ள ஹீரோக்களுக்கு எவ்வளவு ‘டிமாண்ட்’ இருக்கும்?

கடந்த சில வாரங்களாகவே காவி கட்சியை சேர்ந்த முக்கியமானவர்கள் எஸ்.ஏ.சி வீட்டுப்பக்கம் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்களாம். விஜய் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் போனால் அதற்குரிய சகல மரியாதைகளும் தானாக வீடு வந்து சேரும் என்பதில் துவங்கி, அவரது தகப்பனாரான உங்களுக்கு ராஜ்ய சபை சீட் தருவோம் என்கிற வரைக்கும் வாக்குறுதிகளை வீசி வளைத்து பிடிக்க பார்க்கிறார்களாம்.

இந்த பேச்சு வார்த்தையில் பிரபல சேனல் அதிபர் ஒருவரும், முன்னாள் அதிமுக அனுதாபியும், எம்ஜிஆருக்கு நெருக்கமானவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஊர் பெயரை கொண்ட பிரமுகரும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் சதுரங்கத்தில் செவனேன்னு நின்னாலே ‘செக் மேட்’ வைக்கிற ஊர் இது. இந்த லட்சணத்தில் ‘உள்ளே இறங்கி ஆடலாம் வா’ன்னு கூப்பிட்டா பின்னாலயே போயிர முடியுமா? மிரண்டு கிடக்குதாம் வீடு.

Emissaries of BJP wooing SAC to rope in Vijay

Parliament elections have been announced. Political parties are now busy roping in all and sundry actors and actresses to canvas votes for them. Vijay who is leading Makkal Iyakkam is one of the important film personalities for political parties. Though he has been silent since Thalaivaa’s debacle at the box office due to political rumblings, emissaries of BJP are now road rolling Vijay’s house putting pressure on Vijay’s father SA Chandrasekaran. They have promised even a Rajya Sabha seat to SAC if Vijay agrees to canvas for their party. A popular TV channel owner, a former AIADMK leader and a Producer are involved in the discussion with SAC. Will SAC succumb to the appeasement? Only time will tell.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வயசை மீறிய LOVE கன்னுக்குட்டிக்கு கேட்குது COW

எலி தாண்டுற வயசுல புலி தாண்டுனா என்னாகும்? அப்படிதான் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இளம் இசையமைப்பாளரின் வேகத்தை பார்த்து. இந்த வேகம் தொழிலில் இருந்தால் சந்தோஷம். ஆனால்...

Close