கைவிட்ட அஜீத் கண்ணீர் விடாத மைத்துனர்! ஒரு ‘ நேர் எதிர் ’ பஞ்சாயத்து

சொந்தம் கைவிட்டாலும் சுற்றம் கைவிடாது என்பதை அஜீத்திற்கு நிரூபித்திருக்கிறார் அவரது மச்சான் ரிச்சர்டு. தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அவரது தொழில் ஸ்தானத்தில் சனி உட்கார்ந்திருந்ததால், ரிச்சர்டின் நாற்காலி எப்போதுமே முக்காலி போல நொடித்தும் நொடியாமலும் கிடந்தது. ஆனால் அவரது தங்கை கணவரான அஜீத்திற்கோ அப்படியொரு அசுர வேக அந்தஸ்த்து இங்கே. தமிழ்சினிமாவில் அவர் கை காட்டியவர்கள் எல்லாம் கரன்ஸிவான்களானார்கள்.

ஆனால் ஒரு முறை கூட அவர் ரிச்சர்டுக்காக பரிதாபப்படவேயில்லை. தனது படங்களில் யாரோ பெத்த பிள்ளைகளான ஆர்யாவையும் விதார்த்தையும் கூட்டு சேர்த்துக் கொண்டாரே ஒழிய சொந்த மச்சானுக்கு சோன் பப்படி லெவலுக்கு கூட மரியாதை தரவில்லை அஜீத். ஆனாலும் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றாமல் திடுதிடுவென வளர்ந்து நிற்கும் காட்டு மரங்கள் போல வளர்ந்து நிற்கிறார் ரிச்சர்டு. தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களுக்கு மினிமம் கியாரண்டி இருப்பதாக கூறப்படுகிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.

இந்த நிலையில் ரிச்சர்டு நடிக்கும் த்ரில்லர் படமொன்றை தமிழில் தயாரித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் நேர் எதிர். பார்த்தி வில்லனாகவும், ரிச்சர்டு ஹீரோவாகவும் நடிக்கும் இந்த படத்தை எம்.ஜெயப்ரதீப் இயக்கியிருக்கிறார். இவர் சிங்கம் புலி என்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிவர்.

இந்த படத்தை உலகமெங்கும் தாணுவின் கலைப்புலி நிறுவனம் வெளியிடுகிறது. பொதுவாகவே தாணு ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அதற்கு விநியோகஸ்தர்கள் சைடில் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த நம்பிக்கையில் இந்த படத்தையும் பெருமளவு தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். படத்தை அஜீத்துக்கு போட்டு காட்டுவீங்களா?

Kalaipuli Thanu to distribute Richard’s Ner Edhir

Richard who could not establish himself either in Malayalam or in Tamil films, despite being brother in law of Ajith, in Kollywood, has established a nick for himself through his hard work in Telugu film industry. People from the industry say that his films receive minimum guarantee level without pinching the pocket of the producers. He is now doing a film in Tamil titled Ner Edhir, a thriller, directed by Jaipradeep, who worked as assistant director in Singam Puli. Richard will be playing the lead as well as villain in the film. The film is now complete and is ready for release. Kalaipuli Thanu who has good rapport with theatrical distributors, has come forward to release the film world-wide.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக குயில்கள்

[nggallery id=101]

Close