கொஞ்சம் கூட ஈரமேயில்லாமல் நடிகையை தொந்தரவு செஞ்சுட்டாங்க…
எங்கேயோ இடி இடிச்சுச்சாம். யாருக்கோ பட படத்துச்சாம். அப்படியாகிவிட்டது ஈரம் சிந்துவின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சிந்து தற்கொலை முயற்சி என்றொரு செய்தி வர, லண்டனில் இருந்த ஈரம் சிந்துவை கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் போனில் தொல்லை செய்தார்கள் மலையாள நிருபர்களும் அவரது ரசிகர்களும்.
குழந்தை, குடும்பம்னு நான் இங்க நிம்மதியா இருக்கேன். எனக்கு எதுக்காக சங்கு ஊதுனாங்க என்கிற மகா பெரிய டவுட்டோடு இன்டர்நெட்டை துருவிய சிந்து ‘அடக்கடவுளே’ ஆகிப்போனார். ஏன்?
தான் தற்கொலை செய்ய முயன்றதாக மற்றவர்களை நம்ப வைத்த சிந்து தமிழில் நடித்து வரும் ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதை புரிந்து கொண்டாராம். இருந்தாலும் நம்ம வரைக்கும் சேஃப்ட்டி ஆகிப்போம். அவங்க கதை நமக்கெதுக்கு என்ற முடிவுக்கு வந்த சிந்து மறுபடியும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு கேரளாக்காரர்களின் வாயை மூடியிருக்கிறார்.
ஆமாம்… நம்ம தமிழ்ப்பட சிந்துவுக்கு என்ன பிரச்சனை? இவர் ஐ.நா என்றொரு படத்தை தயாரித்தாராம். படத்தின் பார்ட்னர் …ந்தா வந்துர்றேன் என்று நாட்டைவிட்டே ஓடிப்போக கடன் வாங்கி ஷூட்டிங் நடத்தினாராம் இவர். வாங்கியதெல்லாம் மீட்டர் வட்டி. இவரை கரையேற முடியாத அளவுக்கு படுத்தி எடுத்திருக்கிறார்கள் அவர்கள். வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்
பாலாவின் பரதேசியில் நடித்த சிந்துவை நிஜ பரதேசியாக்குகிற அளவுக்கு சுரண்டுன அந்த வட்டிக்காரர்களின் கையில் கட்டை முளைக்க… (இந்த ஐ.நா பட பிரச்சனையை ஐ.நா சபைக்குதான் கொண்டுபோய் தீர்க்கணும் போலிருக்கு)