கொஞ்சம் மசாலா Thookkalaaaa ஒரு படம் போடுங்க….!
காரம், மணம், குணமுள்ள மசாலா பாக்கெட் நிறுவன உரிமையாளர் ஒருவர் படம் எடுக்க வந்தால், அந்த படத்தில் எவ்வளவு மசாலா இருக்கும்? சில வாரங்கள் காத்திருந்தால் அந்த மசாலாவை ருசி பார்த்துவிடலாம். சேலம் திருநெல்வேலி பகுதிகளில் சிட்டு மசாலா என்ற டேஸ்ட்டான மசாலா நிறுவனத்தை நடத்தி வரும் mpl நிறுவனம் மறுமுனை என்ற படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் மாருதி என்ற புதுமுக ஹீரோ அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக மிருதுளா நடிக்கிறார். இவர் வல்லினம் பட நாயகி.
படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஹீரோயின் மிருதுளா என் மகள் மாதிரி. படத்தின் ஹீரோ மாருதி என் மருமகன் மாதிரி என்று அவர் பேசிவிட்டு போக, பின்னாலேயே வந்த எஸ்.வி.சேகர், இதை உண்மைன்னு நினைச்சுகிட்டு ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிராதீங்க என்றார் ஜோடிகளிடம். அப்படியே அவர் கூறிய மற்ற விஷயங்களை கேட்டுக் கொண்டால், ஜோடிகளுக்கு எதிர்காலம் நிச்சயம். வேறொன்றுமில்லை, அவர் சொன்னது இதுதான்…. இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் ஹீரோ மாருதியும் சரி, மிருதுளாவும் சரி. தனி மனித வாழ்க்கையில் ஓழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும். அதுதான் சினிமாவில் வெற்றிக்கான வழி என்றார்.
காதல் ஒருவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது. அப்பா அம்மாவின் கனவுகளை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதுதான் மறுமுனை படத்தின் நாட். இந்த தலைப்பை தேர்வு செய்ததே ஹீரோவின் அப்பா நெல்லை வசந்தன்தானாம். இவர் பிரபலமான பிரசன்ன ஜோதிடர். நான் இப்படிதான் வருவேன்னு என் அப்பா முன்னாடியே கணிச்சுட்டார். அதன்படி நான் போயிட்டு இருக்கேன் என்றார் மகன்.
அப்படின்னா ரிலீஸ் தேதியையும் அப்பாதான் முடிவு செய்வார்னு சொல்லுங்க…!
Marumunai team holds the pre-release press meet
Marumunai pre-release press meet was held on 6th Jan. The film has new face Maruthi playing the lead. Pairing him is Mrudula who is awaiting the release of her film Vallinam, in which she played the lead opposite to Nakul.
MS. Bhaskar who plays the father’s role of Maruthi in the film, said that Mrudula is like my daughter and Maruthi is like his son in law. SV Sekhar who spoke next to him caution both Maruthi and Mrudula to follow the individual discretion to achieve success in the field.
Marumunai deals with the story of a young man whose life gets affected because of ‘love’, and how ‘love’ has shattered the dreams of his parents. Incidentally it was Maruthi’s father, Nellai Vasanthan, who is an astrologer, selected the title of the film.