கோச்சடையான் ரிலீஸ்… – பார்க்கலாம் யார் சுயநலவாதி என்று?

ரஜினியின் படங்கள் வரும்போதெல்லாம் தங்கள் பட ரிலீசை தள்ளி வைத்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கொடியை பறக்க விடுவது முன்னணி பின்னணி சைட்னி ஹீரோக்களின் வாடிக்கை. இந்த முறை கோச்சடையான் ஜனவரி 10 ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹீரோக்களின் ரீயாக்ஷன் வழக்கம் போலதான் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதுக்கெல்லாம் அஞ்சுன ஆள் நான் இல்லே என்பது போலவே நடந்து கொண்டிருக்கிறார்கள் விஜய்யும் அஜீத்தும்.

கண்டிப்பா வீரம் வரும். வருது… என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஈமெயிலில் மிருதங்கம் வாசித்திருக்கிறார். பேராண்டி சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி என்பதால் இந்த வாக்கை அப்படியே அஜீத்தின் வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொதுவாக ஒரு படத்தின் வெளியீட்டை தீர்மானிப்பது தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்தான் என்றாலும், விஜய் அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்கள் விஷயத்தில் அப்படியல்ல. அவர்கள் இருவரும் இந்த படத்தை இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போடலாமே என்றால் தயாரிப்பாளர் தலைவணங்கி ஆமோதிக்க வேண்டியதுதான். (இந்த பாக்கியம் கொஞ்ச வருஷங்களாக விஜய்க்கு இல்லாமல் போனாலும், அஜீத்திற்கு அப்படியே இருக்கிறது) இருந்தும் ரஜினி பட அறிவிப்பை அஜீத் அலட்சியப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன? அதுதான் பெரிய ஆராய்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது இங்கே.

இத்தனைக்கும் இப்போதுதான் வந்தது ஆரம்பம். அதன் கலெக்ஷனில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் மறுபடியும் அஜீத் படத்தில் அள்ளிக்குவிக்க ஆசைப்படுவதை இன்னும் நாலு மாதத்திற்கு தள்ளி வைக்கலாம். நிலைமை அப்படியிருக்க, வந்தே தீருவேன் என்று அஜீத் மல்லுக்கட்டுவது ஏன்? அசல் படத்தின் ஷுட்டிங்கின் போது அடிக்கடி ரஜினியை சந்தித்து அட்வைஸ் கேட்டு வந்தவர் அஜீத். ‘வரிசையா தோல்விப்படங்கள் வந்தால், அந்த ஹீரோ லேசா நெகட்டிவ் ஷேட் உள்ள படங்களில் நடிக்கணும். அப்பதான் மறுபடியும் ஒரு வெற்றியை அடையலாம்’ என்று மிக நுணுக்கமாக அஜீத்துக்கு அட்வைஸ் செய்தவர் ரஜினி. அதனால்தான் மங்காத்தாவில் அப்படியொரு கேரக்டரில் நடித்து, தனது தொடர் தோல்வியை விரட்டியடித்தார் அஜீத்.

கோச்சடையானில் ஏராளமான கோடிகளை கொட்டிவிட்டு, டென்ஷனோடு நகம் கடித்துக் கொண்டிருக்கும் சவுந்தர்யாவுக்கு அத்தனை கோடிகளையும் மீட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. (அது வேறொரு நிறுவனத்தின் முதலீடாக இருந்தாலும்) ரஜினியே நேரில் தோன்றும் படமாக இருந்திருந்தால் இந்த டென்ஷன் அவருக்கு தேவையேயில்லை. ஆனால் இதில் வருகிறவர் கிராபிக்ஸ் ரஜினி. இதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்கிற அச்சம் தியேட்டர்காரர்களுக்கு இருப்பதை போலவே சவுந்தர்யாவுக்கும் இருக்கிறது.

அஜீத்தும், விஜய்யும் ரஜினியை நிஜமாகவே நேசிப்பவர்களாக இருந்தால், கோச்சடையானுக்கு வழிவிட்டு ஒதுங்கவேண்டும். இல்லையென்றால் ‘பாவம்… அறியாப்பசங்க’ என்று ரஜினி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்! யார் சுயநலவாதிகள்?

பார்க்கலாம்… இன்னும் சில வாரங்கள்தானே இருக்கிறது அந்த க்ளைமாக்சுக்கு!

Will Ajith and Vijay give way for Kochadaiiyan?

An unusual circumstance hitherto unknown to Kollywood is likely to happen very soon. Producers of Ajith’s film Veeram and Vijay’s film Jilla, have announced 3 months back that their films will hit the screens for Pongal festive season. Until few days ago, the scene was it will be clash for Ajith and Vijay for Pongal.

However, the latest announcement from the production house of Kochadaiiyaan has completely changed the atmosphere. While the distributors and theatre owners are too eager to screen Kochadaiiyan to cash in on the super star’s popularity, the grand opening Ajith commands for his films too cannot be avoided. Vijay too has now joined the race with Thalaivaa turned out to be damp squib, the onus is Vijay and his fans to show-case his collection credentials.

While the producers and distributors of Ajith and Vijay films would have butterflies in their stomach on hearing the announcement of Kochadaiiyaan for Pongal, the prdoucers’ and distributors of Rajini starrer too would sail the same situation. Because Kochadaiiyaan is not a direct Rajini film, but animated Rajini film; so how the audience will accept this new concept, can be known only after the release of the film.

With everyone raising their pitch for their film it remains to be seen who the ultimate boss is. Or who will shed their ego and give way for others. It is better if everyone concerned should first appreciate that it is crores of rupees involved in every film, and hence concentrate on how safely they can market their film and get the profit. Hope they put their heads together and chalk out a strategy so that it would be beneficial for all.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்படின்னா உங்கப்பன் யானையாடா? – இது தாய்லாந்து தடாலடி!

இந்த வாரம் 3D வாரம் போலிருக்கிறது. ஆனந்தவிகடனின் கண்ணாடி தந்த பிரமிப்பு மறைவதற்குள், அடுத்த கண்ணாடியை தந்தார்கள் ‘கும்கி வீரன்’ என்கிற டப்பிங் படத்திற்காக. (இப்படத்தின் ஒரிஜனல்...

Close