கோச்சடையான் விழாவுக்கு ஏன் கமல்ஹாசனை அழைக்கவில்லை? ரஜினி மகள் பதில்

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.

மதம் கொண்ட யானையை ஒருவழியாக இழுத்து கொட்டடியில் கட்டிய பெருமையோடு இருந்தது அவரது முகம். பல கேள்விகள். பல பதில்கள். எல்லா கேள்விகளும் தம்மை சந்தோஷப்படுத்தாது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கேள்விதான் இது.

ஃபேஸ்புக்குல ஒரு கமெண்ட் பரவலா போயிட்டு இருக்கு. அதாவது எல்லா அப்பாக்களும் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி தருவாங்க. ஆனால் ரஜினி மட்டும்தான் தன் மகளுக்காக பொம்மையாகவே ஆகிட்டார்னு. இந்த கமென்ட் பற்றி என்ன நினைக்கிறீங்க? இதுதான் கேள்வி. அதற்கு நிறுத்தி நிதானமாக பதில் சொன்னார் அவர். ‘ஒரு படம்னா அது குறித்து மாறுபட்ட கருத்துக்களும் வரும். அதையும் ஏத்துக்கணும். ஆனால் நான்தான் இந்த படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல எடுக்கப்பட்ட படம்னு முன்னாடியே சொல்லிட்டேனே’ என்றார் சௌந்தர்யா.

மும்பையிலேர்ந்து நட்சத்திரங்களை இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவழைச்சிருந்தீங்க. ஆனால் உங்கள் அப்பாவின் நண்பரான கமல் சார் வரலையே? என்ற கேள்விக்கும் பக்குவமாக பதில் சொன்னார் சௌந்தர்யா. கமல் சார் வரணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியலே என்றார்.

கேள்விகளில் கொஞ்சம் கொஞ்சமாக காரம் கூடியது. கோச்சடையான் விளம்பரங்களில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலி பெயர் வந்திருக்கே? இந்த கேள்விக்கு மட்டும் சற்று குழந்தை தனமாக பதில் சொன்னார் சௌந்தர்யா. படத்தில் ஒரே ஒரு பாடல்தான் வாலி சார் எழுதியிருக்கார். மற்ற எல்லா பாடல்களும் வைரமுத்து சார் எழுதியிருக்கார். அதனால்தான் அவர் பெயரை பின்னாடி போட வேண்டியதா போச்சு என்றவரிடம், இருந்தாலும் வாலி சீனியராச்சே? என்ற துணை கேள்விகள் எல்லாம் எடுபடவே இல்லை. திரும்பவும் அதே பதிலை ரிப்பீட் செய்தார்.

Kamal could not come because he was busy shooting – Soundarya Ashwin

After the audio launch of Kochadaiiyaan, its director Soundarya Ashwin met the press with pride having made the first step towards release of the film. For a debutant director it is a big achievement, especially directing as big a star as Rajinikanth, and her face said it all. 

Quizzed by reporters regarding the trending on the social network that Soundarya made her father a doll in her film, she responded quite maturely saying that when a film is made different viewpoints bound to surface. One has to accept whatever may be views. Further she added, “I had already indicated before commencing the project that the film will be made using Motion Capture Technique”.

When asked about why Kamal did not grace the occasion, she revealed that she was also interested to see Kamal Hassan should grace the event. However since he was busy with the shooting of his film Uthama Villain, he could not make it to the event, she explained.

On why Vairamuthu’s name appear before Vaalee’s name in publicity posters, she defended rather unconvincingly saying that Vaalee sir wrote only one song, where as Vairamuthu sir wrote the remaining songs. “That is why his name appeared behind Vairamuthu’s name” she said rather frivolously. When told Vaalee was senior to Vairamuthu, she repeated the same comments again.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sri Priyanka Actress Stills

[nggallery id=283]

Close