கோடம்பாக்கத்தில் சின்னாபின்னப்படும் ஆம் ஆத்மி

கோடம்பாக்கத்தில் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லியை பிடித்தாலும் பிடித்தார்கள். தமிழ்நாட்டை நாங்க புடிச்சி தர்றோம் என்று மார்தட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது ஒரு கோஷ்டி. ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை விதிமுறைகள் எதையும் இவர்கள் படித்தார்களா, அல்லது யாராவது சொல்லக் கேட்டு அறிந்தார்களா என்றும் புரியவில்லை. ஆனால் நான்… நீ… என்று போட்டிப் போட்டுக் கொண்டு விசாரித்து வருகிறார்களாம்.

நல்லவேளையாக நடுவில் கிளம்பிய வதந்திக்கு நாலு லாரி தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார் விஷால். எனக்கு ஆம் ஆத்மி மீது மட்டுமல்ல, எந்த கட்சி மீதும் ஆசையில்ல. நான் அரசியலுக்கு வரப்போவதும் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் அவர். ஆனால் மன்சூரலிகான், பார்த்திபன் போன்ற நடிகர்களுக்கு நாக்கில் லேசாக உமிழ் நீர் ஊறி, அது டெல்லி வரை தெறிப்பதாக கேள்வி. சென்னையில் அந்த கட்சியின் பொறுப்பாளர்கள் யார் யார் என்று இவர்கள் விசாரித்தும் வருகிறார்களாம்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை லட்சுமிராயை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், ‘நீங்க ஆம் ஆத்மி கட்சியில சேரப்போறீங்களாமே?’ என்று கேட்டு வைத்தார்கள். (இந்த கேள்வியை கேட்க காங்கிரஸ், பிஜேபி காரர்களிடம் ரகசிய ஒப்பந்தம் ஏதும் போட்டார்களா என்றும் புரியவில்லை) அதற்கு சீரியசாக பதிலளித்த லட்சுமிராய், நான் இன்னும் முடிவு பண்ணல. பட் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேர்வேன் என்று கூறியிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக ஒரு விதிமுறையை அவசரமாக சேர்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அது…? கவர்ச்சி நடிகைகள், ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழ ரேஞ்சுக்கு மார்க்கெட் போனவர்கள் யாரையும் கட்சி சேர்த்துக் கொள்ளாது என்பதுதான்.

Aam Admi Party’s membership drive keen on Kollywood

After gaining the governance of Delhi by Arvind Kejriwal’s Aam Aadmi Party, few unscrupulous elements are creating rumours about popular heroes of Kollywood joining their party. Vishal nipped the bud saying that he has no intention of joining any political party leave alone AAP.

However actors like Parthieban and Mansoor Ali Khan are making efforts to find out who is in charge of AAP in Delhi, though nothing has so far emerged. Meantime, Lakshmi Rai who came for a retail showroom opening ceremony was asked by reporters if she would be joining AAP. She was quoted as saying that she has not decided yet, but would soon join a political party.

Read previous post:
சொந்த காசில் சூனியம்… அஜீத்தின் புதுமுடிவால் அச்சம்!

தமிழ்சினிமாவில் சொந்தப்படம் எடுக்கிற நடிகர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று... நம்ம முகத்தை காமிச்சு இவன் சம்பாதிச்சுட்டு போறானே என்று தயாரிப்பாளரை சந்தேகப்படுகிற ரகம். மற்றொன்று தனக்கு...

Close