கோடைக்காலத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக வைக்கப்படும் பிரிட்டிஷ் கடிகாரங்கள்

பிரிட்டிஷ் கோடை நேரம் என்று குறிப்பிடப்படும் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்கும் நடைமுறையானது இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றது. வரும் அக்டோபர் வரை இந்த நடைமுறையே அங்கு வழக்கத்தில் இருக்கும். பகலொளி சேமிப்பு நேரம் என்ற மற்றொரு பெயரும் இந்த வழக்கத்திற்கு குறிப்பிடப்படுகின்றது. கடந்த 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த வில்லியம் வில்லேட் என்ற குதிரை சவாரியாளர் அதிகாலை நேரங்களில் அங்குள்ள காடுகளின் வழியே நீண்ட சவாரிகளை மேற்கொள்ளுவது வழக்கம். பெரும்பான்மையான மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் தனது பயணங்களை மேற்கொள்ளும் அவர் பகல் வெளிச்சம் வீணாவதைத் தடுக்கும் முறையில் இத்தகைய நேர மாற்றத்தை அப்போது அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த ஒரு மணி நேர கூடுதல் சூரிய வெளிச்சத்தினால் நிறைய சுகாதார நலன்கள் ஏற்படும், குறிப்பாக பருவகால பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனச்சோர்வு நீங்கும் என்பது இந்த முறையின் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்படுகின்றது. மேலும் நேர அதிகரிப்பினால் ஒருவரது ஆற்றல்கள் சேமிக்கப்படுவதாகவும், போக்குவரத்து விபத்துகள், குற்றங்கள் போன்றவை குறைவதாகவும் இந்த நேர மாற்றத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டில் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த நேர மாற்றத்திற்குப் பின்னர் வந்த வாரத் துவக்கங்களான திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாரடைப்பு ஆபத்துகளும் 10 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மக்களுக்கு இந்த நேர மாற்றத்தினை நினைவுபடுத்தும் எளிய வழியாக ‘ஸ்ப்ரிங் ஃபார்வேர்ட், ஃபால் பேக்வர்ட்’ என்ற சொற்றொடரும் அங்கு பயன்படுத்தப்படுகின்றது.

Read previous post:
‘அஞ்சான் ’ படப்பிடிப்பில் ‘நாம் தமிழர் ’ ஆர்ப்பாட்டம்? தியேட்டரிலிருந்து ‘இனம் ’ வாபஸ்…

சந்தோஷ் சிவன் இயக்கிய ‘இனம்’ படத்தை லிங்குசாமி வாங்கி வெளியிட்டாரல்லவா? அந்த படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக உடனடியாக படத்தை திரையரங்குகளில் இருந்து வாபஸ் பெறுவதாக இன்று...

Close