கோலிசோடா உடைப்பது கொண்டாட்டத்தில் முடியும்!

ஒரு படத்தின் நிஜமான சக்சஸ் மீட் வைக்கப்படும் காலம் என்பது அந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தந்தது என்பதை துல்லியமாக கணிக்கிற காலம்தான். ஆனால் படம் வெளியாகி ரெண்டாவது ஷோவிலேயே ‘இந்த படத்தை இமாலய வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கு நன்றி நன்றி நன்றி’ என்று போஸ்டர் அடித்து போகாத ஊருக்கு மேப் போடும் சினிமாக்கார்கள்தான் டெபாசிட் கூட வாங்காமல் திணறுகிறார்கள்.

விஜய் மில்டன் பத்திரிகையாளர்களை கூட்டி சக்சஸ்மீட் வைத்த காலம், மிக மிக சரியான காலம். ‘கோலிசோடா’வின் லாபம் மட்டும் ஆறு கோடி என்று வாயை பிளக்கிறார்கள் இங்கே. படத்தில் இடம் பெற்ற அத்தனை டெக்னீஷியன்களையும் அழைத்து கொண்டாடிவிட்டார் அவர்.

இந்த படம் உருவாக முழுமுதற் காரணம் என் நண்பன் டைரக்டர் பாண்டிராஜ்தான். அவன் இல்லேன்னா இந்த படம் இல்லே. முதல்ல இந்த கதையை அவனிடம்தான் சொன்னேன். நல்லாயிருக்கு என்று பாராட்டு பெற்றவுடன், இந்த படத்தை நீயே உன் பேனர்ல தயாரிக்கணும் என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில்தான், நீயே தயாரிப்பாளரா இரு. உனக்கு முதுகெலும்பா இருந்து இந்த படத்தை நான் உருவாக்கி தர்றேன்னு இந்த படத்தை என்னையே தொடங்க வைத்தான். ஒரு நாள் ராத்திரி பதினொரு மணிக்கு ஷுட்டிங் முடிஞ்சு பேட்டா கொடுக்க காசில்ல. பாண்டிராஜுக்குதான் போன் பண்ணினேன். ராத்திரி ஒரு மணிக்கு ஒரு லட்ச ரூபாயை எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு போனான். அதை என்னால மறக்கவே முடியாது என்று கூறினார் விஜய் மில்டன்.

அவ்வப்போது பணம் கொடுத்து உதவியது மட்டுமல்ல, படத்திற்கு வசனம் எழுதி, ஆர்ட்டிஸ்டுகள் செலக்ஷனில் ஐடியா கொடுத்து, விஜய் மில்டனை வெற்றி மில்டனாக்கியதில் பெரும்பங்கு டைரக்டர் பாண்டிராஜுக்கு உண்டு. இவர் என்ன சொல்கிறார்?

நான் ‘பசங்க’ கதையை எடுத்துகிட்டு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கியதுதான் ஞாபகத்துக்கு வருது. எனக்கு சசிகுமார் சார் உதவியது மாதிரி நானும் மற்றவங்களுக்கு உதவணும்னு ஆசைப்பட்டேன். இப்போது கூட நண்பர்கள் சிலர், கேடி பில்லா, இது நம்ம ஆளு மாதிரி படங்களை நீங்க எடுக்கணுமான்னு கேட்கிறாங்க. அதுல வர்ற பணத்துலதான் நான் இது மாதிரி நாலு பேருக்கு உதவ முடியுது. சீக்கிரம் ‘பசங்க’ மாதிரி ஒரு படத்தை எடுப்பேன் என்றார் பாண்டிராஜ்.

நல்ல நண்பர்களை பெற்றவர்களுக்குதான் தெரியும், கோலிசோடா உடைப்பது கொண்டாட்டத்தில் முடியும் என்று!

Goli Soda success meet held

Vijay Milton’s Goli Soda is raking the moolah at the Box Office to everyone’s pleasant surprise. It was announced by the makers that the film had already done a business of about Rs.8 crores in its 2nd week itself. In its 3rd week, the film is still drawing good crowd.

While it has become fashion for every producer to host the success meet on the 2nd day or the 3rd day of its release announcing the success of the film, even though the film did not even attain the break-even at the Box Office. But Vijay Milton waited for two full weeks and having got the profit of Rs.6.0 crores (it is heard), he convened the success meet of the film. Director Pandiaraj and other members of the crew and cast participated in the event.

Speaking on the event, director Vijay Milton pointed out that the entire credit for the success of the film should go to director Pandiaraj. He said that he narrated the story first to his friend director Pandiaraj, and asked him to produce the film. Instead he encouraged me to produce the film by himself and he would support him completely. He recalled an instance when he could not disburse money to his technicians after completing the shoot around midnight, he called Pandiaraj and told him his situation. He immediately came to the shooting spot with Rs.1.0 lakhs with which he disbursed. Pandiaraj had helped him in similar ways on many occasions, apart from giving suggestions from cast selection to dialogues, during the production stage, Milton recalled with gratitude.

Director Pandiaraj during his speech said that he remembered his days when he took his Pasanga stories to many producers’ office. The struggle he had then made him to help his friends who want to shine in their career. That is how he helped Milton, he explained. Some of my friends and colleagues are asking me why take Kedi Billa and Idhu Namma Aalu type films. But the reality is he could earn money through such films only, he pointed out. He also said that he would soon produce a film similar to Pasanga type.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வாத்தியார் சொல்லியும் சசிகுமார் கேட்கலையே…? டைரக்டர் புலம்பல்

‘அழகான ஹீரோக்களை கூட அழுக்காக்கி காட்டுவது பாலாவின் ஸ்டைல். வில்லேஜ் ஹீரோவான சசிகுமாரை அஜீத் விஜய் சூர்யா மாதிரி ஸ்டைலாக காட்டினால் அதுதான் என்னோட பாணி’. இப்படியொரு...

Close