கோலிசோடா வெற்றிதான், அதுக்காக…?

ஒரு படத்தின் வெற்றியை வைத்துக் கொண்டே நாலு வருஷத்துக்கு கல்லா கட்டிவிடுவார்கள் சிலர். ஆனால் விஜய் மில்டன் அப்படிப்பட்டவரல்ல. நிறுத்தி நிதானமாக அடுத்த ஸ்டெப் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அதன் காரணமாக அலறி அடித்துக் கொண்டு அடுத்த படத்திற்கு கிளம்பி ஓடாமல் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கிளம்பியிருக்கிறார். அட, இதென்ன ஆச்சர்யம் என்பவர்கள் பின்வரும் செய்தியை படிக்கவும்.

கோலிசோடாதான் இந்த வருடத்தின் முதல் ஹிட். ஜனவரியில் துவங்கி மார்ச் இந்த நிமிடம் வரைக்கும் தேடினாலும் கோலிசோடாவின் ஹிட் இன்னும் முறியடிக்கப்படவே இல்லை என்கிறது கலெக்ஷன் வட்டாரம். வரப்போகும் படங்கள் எப்படியோ? இருந்துவிட்டு போகட்டும்… தனது நண்பரும், இயக்குனருமான பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கும் ரா ரா ரா ராஜசேகர் என்ற படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான்.

காதல், வழக்கு எண் என்று விஜய் மில்டன் பாலாஜி சக்திவேலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகிவிட்டார். அந்த சென்ட்டிமென்ட் காரணமாக இந்த படத்திலும் மில்டனையே பயன்படுத்தப் போகிறார் பாலாஜி சக்திவேல். திடீர் மாப்பிள்ளை முறுக்கு எதுவும் இல்லாமல், ஓ.கே என்றாராம் மில்டன்.

வழக்கம்போலவே எந்த நட்சத்திர அலட்டலையும் நம்பாமல் புதுமுகங்களை வைத்தே ரா ரா ரா ராஜசேகரை எடுக்கப் போகிறார் பாலாஜி. இந்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.

Vijay Milton’s next film will wait

Few days ago media reports suggested that Vijay Milton will be doing a film with Karthi in the lead, and Karthi has given his consent too. However Vijay Milton, the director of the super hit film Goli Soda has scotched the reports saying that he is yet to decide on his next directorial venture. He is currently working on a script which may take time to finalise, he added. Meanwhile he would teaming up with director Balaji Sakthivel for the latter’s upcoming film titled Ra Ra Ra Rajasekar, as DOP. This will be Milton’s 3rd film with Balaji Sakthivel as his earlier association in Kadhal and Vazhakku Enn 18/9 went on to make history. So the sentiment continues in this film too for both. As is his usual practice Balaji Sakthivel will introduce new faces in the film, which is produced by director Lingusamy’s Thiruppathi Bros.

1 Comment
  1. Anantharaman says

    Best Wishes Balaji sir

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ ஹேர் டை ’ முயற்சி? காம்ப்ரமைஸ் ஆனார் கவுதம்!

சஹாரா கம்பெனியின் சிஇஓ சட்டையில் கருப்பு மை அடிக்கப்பட்ட போது சாதாரண பிரஜைகளுக்கு எவ்வளவு சந்தோஷம் வந்ததோ, அவ்வளவு சந்தோஷம் வரும்... அஜீத்தின் தலைக்கு கருப்பு மை...

Close