சதி விதிகள் தெரியாதவரா ரஜினி? நல்ல முடிவை அவரே எடுக்கட்டும்…

பள்ளத்திலிருக்கும் மகா மெகா கம்பெனிகளை கூட உயர்த்தி விடும் சக்தி இன்றைய தேதிக்கு இருவர் கையில்தான் இருக்கிறது. ஒருவர் ரஜினி. இன்னொருவர் அஜீத். ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் யார் என்பதை விட, அவர் யாருக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்கிற கவலை சினிமாவுலகத்திற்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கிறது. பாரம்பரியமான ஏ.வி.எம் நிறுவனம் இன்று எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ரஜினி இப்பவும் ‘முதலாளி’ என்று ஆசையோடும் அன்போடும் பெருமையோடும் அழைக்கிறவர் ஒருவர் உண்டென்றால் அவர் ஏ.வி.எம் சரவணன்தான். அப்படியென்றால் ரஜினி அடுத்து இவருக்குதானே கால்ஷீட் தர வேண்டும்? இது முதலாளி அந்தஸ்துக்காக அல்ல. முதலாளியின் கம்பெனி இப்போதிருக்கும் நிலைக்காக. ஆனால் ரஜினியை சுற்றி வளைத்து கிட்டதட்ட தன் அன்பிற்கு அடிமையாக்கியிருக்கிறாராம் ஒரு கன்னட தயாரிப்பாளர். ரஜினியின் கால்ஷீட் அவருக்குதான் என்று அதிகாரபூர்வமற்ற, அதே நேரத்தில் சற்று நம்பிக்கையான தகவல் ஒன்று உலவி வருகிறது கோடம்பாக்கத்தில். அவர்? ராக்லைன் வெங்கடேஷ்.

கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழில் மஜா என்றொரு படத்தை தயாரித்தார். அந்த படம் வெளிவந்தபோது பலருக்கும் அவர் சம்பளம் செட்டில் செய்ய வேண்டியிருந்தது. பத்திரிகைகளுக்கு கொடுத்த விளம்பரங்களுக்கும் பாக்கி வைத்திருந்தார். ஆனால் எதையும் சட்டை செய்யாமல் கர்நாடகாவுக்கு சென்றுவிட்டார். அதற்கப்புறம் அவர் படம் தயாரிக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்த பலருக்கு, இப்போது மஜா என்ற படமே மறந்துவிட்டது.

அப்படிப்பட்டவருக்குதான் ரஜினியின் கால்ஷீட் வழக்கப்பட இருக்கிறதாம். ரஜினியை வைத்து லீடர் என்ற படத்தை தயாரிக்கலாம் என்று காத்திருக்கிறது ஏ.வி.எம். தமிழ் திரையுலகின் ஜாம்பவானான கமலை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்து வரும் லிங்குசாமி, மற்றொரு ஜாம்வானான ரஜினியையும் வைத்து ஒரு படத்தை தயாரித்துவிட்டால், தனது சினிமா கனவு நிறைவடைந்துவிடும் என்று காத்திருக்கிறார்.

பல காலமாகவே ரஜினியின் கால்ஷீட்டுக்காக தவம் இருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். கோடி கோடியாக கொட்டி கோச்சடையான் படத்தை தயாரித்திருக்கும் ஈராஸ் நிறுவனம், அதன் ரிசல்ட் வெறும் முட்டையா? தங்க முட்டையா? என்பதே தெரியாமல் இன்னும் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கனவும் ரஜினி கால்ஷீட்தானாம்.

இப்படி ரஜினிக்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களின் காத்திருப்பிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ராக்லைன் வெங்கடேஷுக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்தால், அது இன பாசமாக இருக்குமே அன்றி அதில் வேறு நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

நாமென்ன சொல்வது? சினிமாவின் நெளிவு சுளிவுகள், ஏற்ற இறக்கங்கள்ள, சட்டதிட்டங்கள், சதி விதிகள் தெரியாதவரா ரஜினி?. நல்ல முடிவை அவரே எடுக்கட்டும்…

Let Rajini think and take a fair decision?

Now it is more or less confirmed that Rajini’s next starrer will be with Director KS Ravikumar. Kannada producer and Rajini’s friend ‘Rockline’ Venkatesh will be producing the film, though it is unofficial, Kollywood buzz confirms the development. However we would like to present few information that Rajini must also be aware of.

AVM Saravanan, is waiting since long to produce a film titled ‘leader’ with Rajini. It is also pertinent to point out the present conditions of AVM Production House, which is breathing hard for its survival. There is Eros International which is currently producing his Kochadaiiyaan without worrying about the result of the film. They too are in the wings to produce a commercial venture with Rajini. There are others like Aascar Ravichandran, a reputed producer of Kollywood whose anguish is to produce a film with Rajini, apart from director Lingusamy’s Thirupathi Bros. which is currently producing Uthama Villain with Kamal. If Lingusamy is able to produce a film with Rajini his dream of producing films with two great stalwarts of Kollywood would be fulfilled. There are other people too who may like to produce a film with Rajini to come out of their precarious situations.

When the list of those desirous to produce a film with Rajini is growing day by day, is it fair on the part of the super star to give the opportunity to his friend from Karnataka. It is also heard that Rockline Venkatesh who produced a Tamil film Kuthu has not yet settled salary for some, and payments to few media companies, who associated with the film.

Rajini has a reputation to help those who need survival. He also is aware of the intricacies exists in Kollywood. All we want to say is ‘Let Rajini ponder over and take a fair decision!’

3 Comments
  1. Unami Vilambi says

    ina paasam?

    Rajini pirandhadhu Tamilnaatil ulla naachikuppathil.

    Rockline venkatesh thamizharaa?

    Kisukisu ezhudhubavarukku theriyaadhu polum.

  2. கிரி says

    அந்தணன் நான் உங்கள் தளத்தின் ரசிகன். திரைத் தகவல்களை அனைத்து தளங்களுக்கும் முன்பு நீங்கள் தருவதில் எனக்கு எப்போதும் ஆச்சர்யம் இருக்கும். சில தகவல்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது நான் ரசிக்கும் தளங்களில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    தாங்கள் கூறியுள்ள “இனப்பாசம்” என்ற கருத்து உண்மையில் வருத்தமடைய செய்கிறது. ரஜினி விமர்சிக்கப்படக் கூடாதவர் அல்ல ஆனால், இது போன்ற கருத்துக்கள் நியாயமான ஒன்றாகத் தோன்றவில்லை.

    ரஜினி ஏவிஎம் க்காக சிவாஜி நடித்துக் கொடுத்து இருக்கிறார், தன் குருநாதருக்காக குசேலன் நடித்து அது தொடர்பான பிரச்சனையில் பலரிடம் ஏச்சுகளை வாங்கி இருக்கிறார்.. (நீங்கள் அறியாதது அல்ல), சிரமப்பட்ட பல நடிகர்களுக்காக அருணாச்சலம் என்ற படத்தை எடுத்து கொடுத்தார். சிவாஜி குடும்பம் சிரமத்தில் இருந்த போது அவர்களுக்காக சந்திரமுகி நடித்துக் கொடுத்தார். இது அனைத்துமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம், ரகசியமானதோ அல்லது இட்டுக்கட்டி கூறப்பட்டதோ அல்ல.

    இவ்வளவு செய்து இருக்கிறார்.. ஆனால் இன்னும் ராக்லைன் வெங்கடேஷ் க்கு படம் செய்து கொடுக்கிறாரா என்பது உறுதி ஆகாமலே இது போல வார்த்தைகளை கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை உண்மையாகவே கொடுப்பதாக இருந்தாலும்.. அது அவர் விருப்பம். செய்கிற அனைத்தையுமே தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.. அதோடு இங்கே நிறையப் பேருக்கு (மேலே கூறி உள்ளவர்கள்) உதவி செய்து இருக்கிறார்.

    தமிழ் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். தன் இரு மகள்களுக்கும் தமிழ் பையன்களை மண முடித்து இருக்கிறார்.. தமிழ்நாட்டிலேயே இருக்கிறார். இன்னமும் “கன்னடன் இனபாசம்” என்று மற்றவர்களைப் போல நீங்களும் கூறுவது தான் வருத்தம் அளிக்கிறது.

    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தானே தவிர இதனால் உங்கள் தளத்தை படிப்பதில் நான் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. எப்போதும் போலவே படிப்பேன்.

    சமீபமாக திரை செய்திகள் அல்லாத மற்ற பொது செய்திகளையும் கொடுக்கிறீர்கள். நன்றாக உள்ளது ஆனால், இதை தனித் தளமாக கொடுக்கலாம் அல்லது இந்தத் தளத்தின் பெயரை பொதுவான பெயராக வைக்கலாம்.

    இதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  3. Kannan says

    dei super staar rajiniyai paththi pesathadaa. porukki nayee.

    Rajini vazga Rajini vazga Rajini vazga Rajini vazga Rajini vazga

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் எஸ்.எம்.எஸ். வரும்

ரெயில் பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், இனி ரெயில்வே துறை தொலைபேசி எண் 139 மற்றும் அதன் வலைதளத்திலேயோ சென்று அவர்களுக்கு பெர்த்...

Close