பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்   படத்திற்கு பணிபுரியும் பிரபல ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர்

 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.

மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை  மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.

எக்ஸ் மேன், ஷங்கய் நூண், பேட்மேன் பிகின்ஸ், ஜெம்ஸ் பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலக புகழ் பெற்ற படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிந்த ரோகர் யுயன் இப்படத்தில் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக்காட்சிகளுக்கு பணிபுரிகிறார்.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கம்ர்சியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகிறது.

இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு – ராகுல்.

இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“நாளை முதல் குடிக்கமாட்டேன்” – போட்டுத் தாக்கும் பெண்மணி

இயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா நாளை முதல் குடிக்கமாட்டேன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்....

Close