சந்தானத்தின் வாய்க்கு ‘சலோ டேப்’ – சென்சார் அதிகாரிகளின் கெடுபிடியால் தப்பித்த ட்ரெய்லர்

சந்தானத்தின் வாய்க்கு ‘சலோ டேப்’ ஒட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு என்று பெண்கள் அமைப்பு கொந்தளிக்க வேண்டிய பொன்னான நேரத்தில், அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் அவரை காப்பாற்றிவிட்டது. சென்சார் போர்டு. அண்மையில் ஜீவா, த்ரிஷா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் அப்படத்தின் டரெய்லர் வெளியிடப்பட, அதில் சந்தானம் பேசிய வசனம் பலரையும் கொந்தளிக்க வைத்தது. விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம் பெண் தனது மேலதிகாரியான சந்தானத்திடம் பேசவது போல காட்சி. சார்… நான் அஞ்சு பத்துக்கு போவலாம்னு இருக்கேன். (அதாவது 5.10 க்கு வீட்டுக்கு புறப்படுவதாக இருக்கிறேன்) இதற்கு சந்தானம் பதிலளிக்கிறார். ‘ஏன்… பார்க்க நல்லாதான இருக்கே? ஆயிரம் ரெண்டாயிரத்துக்கே போவலாமே’ என்று.

வேலைக்கு செல்லும் பெண்களை மிகவும் கேவலப்படுத்துவது போல அமைந்திருக்கும் இந்த காட்சிக்கு சென்சார் அமைப்பு எப்படி அனுமதி கொடுத்தது? விளக்கம் தேவை என்று பிரபல பத்திரிகையாளர் விக்னேஷ்ராஜ், சென்சார் போர்டு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முறையான விளக்கத்தை கொடுத்திருக்கும் அதிகாரி, படத்தில் அப்படியொரு காட்சி இருப்பதே எங்கள் கவனத்திற்கு வரவில்லை. நீங்கள் சொல்வது போல அவர்கள் எங்களிடம் அனுமதி வேண்டி கொடுத்திருக்கும் ட்ரெய்லரிலும் சம்பந்தப்பட்ட அந்த காட்சி இல்லை என்று கூறியிருக்கிறார்.

Censor Board rescue act for Santhanam

Santhanam would have been torn apart in to bits and pieces, by the Women’s right activists, but nothing of that sort happened, thanks to the timely action by the Censor Board.

In the recently held audio release of Endrendum Punnagai, a scene from the film was also shown which left the audience, especially the women, stunned. The scene goes like this. A girl who works under Santhanam, her boss, that she intends to go by 5.10 (in Tamil when said it meant differently). Seeing the girl Santhanam responds saying, you look better, why go for small, go for thousand or two. There is certainly pun in the conversation and could be taken lightly. But when it comes to reducing the person’s image, it ought to have been avoided.

A senior journalist,Vignesh Raj, immediately shot a letter questioning how the censor board allowed such a reckless scene in the film. The official from the board responded saying there is no such scene in the film was brought to their attention, nor was there any such scene in the trailer that have been submitted to us.

Santhanam as well as everyone should remember that bringing down the dignity of people is not comedy. You don’t need to appreciate good, but one should resist speaking bad, even if the subject is bad.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“நல்லா இறுக்கி அணைச்சு நடிப்பா…” – மகனுக்கு அப்பா கொடுத்த டிப்ஸ்!

என்னமோ ஏதோ என்றொரு படம். கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்தின் பிரஸ்மீட், ஏக தடபுடலாக நடந்தது. கார்த்திக்கின் வாரிசாச்சே? அப்பா என்னென்ன டிப்ஸ் கொடுத்தார்...

Close