சந்தானம் சூரி மோதல் பங்கு பிரித்தார்கள் பாதி பாதியாய்…
நகைச்சுவையை பொறுத்தவரை சந்தானமா, சூரியா என்றால் இப்படியொரு போட்டி வச்சு இமேஜை கெடுக்கணுமா மச்சி என்று எரிச்சல் படுவார் சந்தானம். அந்தளவுக்கு ஹைடெக் சந்தானத்துடன் லோ டெக் சூரி போட்டிக்கே வர முடியாது என்பது உலக மகா ரசிகர்களின் உட்சபட்ச கணிப்பு. இருந்தாலும், சந்தானத்தின் காமெடி கூட சில நேரங்களில் காலை வாரி விட்டுவிடுகிறது. சூரியின் வடிவேலுத்தனம் அவ்வப்போது ஹிட்டடித்து ஆளுயர மாலைக்கு அவரது கழுத்தை தயாராக்கிவிடுகிறது.
இந்தநிலையில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்? ஒரே சண்டையும் சச்சரவுமா இருக்கும். இது கதிர்வேலன் காதலி படத்தில் எஸ்.ஆர்.பிரபாகரனால் அழைத்து வரப்பட்டவர் சூரி. பொதுவாக உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் என்றால் இஷ்டம். யாரு கால்ஷீட் இல்லேன்னாலும் பரவால்ல. சந்தானம் சார் கால்ஷீட் வேணும். அவரு எப்போ ஓ.கேன்னு சொல்றாரோ, அப்போ ஷுட்டிங்கை வச்சுக்கலாம் என்பார் தெளிவாக. அப்படிப்பட்டவர் படத்தில் சூரியா?
முதலில் அதிர்ந்த உதயநிதி, டைரக்டரின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுத்தாராம். ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் சந்தானத்திற்கும் சூரிக்கும் ஒத்துவரவில்லையாம். என்ன செய்வது? இன்டர்வெல்லுக்கு முன்பு ஒருவர். இன்டர்வெல்லுக்கு பின்பு இன்னொருவர் என்று பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டார் டைரக்டர்.
குதிரைக்கு கொள்ளு, ஆட்டுக்கு புல்லுன்னு அளந்து போட்டா பிரச்சனைக்கு இடமேது? பொழைக்க விடுங்க ரெண்டு பேரையும்!
Director positions the comedy track avoided the controversy!
Ego clashes are common everywhere and Kollywood is no exception. Santhanam has attained a bit of experience and status now which positions him higher than the latest entrant Soori. Director SR Prabhakaran whose film Idhu Kathirvelan Kadhal has brought in Soori to give further fillip to comedy segments. Producer-actor Udhayanidhi Stalin a close friend of Santhanam, who initially had some apprehension, however agreed to the director’s suggestion.
The good intention of the director was not handy as he seemed to have faced some difficulties while shooting Santhanam and Soori together. In the end to avoid controversy and thereby delaying the film, the smart director that he is, he split the comedy portions for Santhanam and Soori in such a way that one appears in pre-interval and the other in post interval.