சந்தானம் வீட்டில் ரெய்டு நடந்தது ஏன்? – மனம் கொள்ளா பேராசையும், கார் ஆசையும்!

சந்தானத்தின் சுக்கிர திசையில் பன்றியை விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்கிறது அவரது சுற்றமும் சூழலும். ஒருபுறம் வடிவேலு மறைமுகமாக இவரை காய்ச்சிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இவரது ‘க்ரீன்’வீச்சு வசனங்களில் கல்லெறியும் வேலையை ஆரம்பித்துவிட்டது சென்சார்.

நாம எதற்கு சும்மாயிருக்கணும் என்று இன்கம்டாக்ஸ் காரர்களும் உள்ளே நுழைய, சந்தானத்தின் சிரிப்ஸ் நிரம்பிய ‘சிப்’பில் எல்லாம் கொள்ளாத எரிச்சலாம். இந்த முறை வருமான வரித்துறையின் வாகனம் ஏன் சந்தானம் வீட்டுக்குள் நுழைந்தது? இந்த கேள்விக்கான விடை சுட சுட கிடைக்க, அது அப்படியே உங்களுக்கு.

கோட்டையிலிருப்பவர்கள் கூட வைத்துக் கொள்ள பிரியப்படாத காரையெல்லாம் கோடம்பாக்கத்திலிருப்பவர்கள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். முட்டு சந்து ஆட்டோக்களுக்கு இணையாக கோடம்பாக்கத்தில் ரவுண்டு கட்டி நிற்கிறது ஆடி கார்கள். லம்போகினி காரில்தான் சொகுசாக வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படி நாலாபுறத்திலிருந்தும் தன்னை ஆசைப்பட வைக்கும் இவர்களால், சின்னதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆசைப்பட்டாராம் சந்தானம்.

சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள இந்த காருக்காக அவர் விண்ணப்பித்திருந்தாராம். இந்த காரை வாங்குவதென்றால் பணம் இருக்கிற யாரும் வாங்கிவிட முடியாது. அவர்களின் பேங்க் பேலன்ஸ். சொசைட்டியில் அவர்களுக்கு இருக்கிற அந்தஸ்த்து இவற்றையெல்லாம் பட்டியலிட்டாக வேண்டும். அப்படி இவர் போட்ட பட்டியல்தான் இன்கம்டாக்ஸ் அதிகாரிகளின் கைக்கு போய்… ரெய்டில் வந்து நின்றதாக கூறுகிறார்கள்.

ஆமா… காரு எப்பங்க டெலிவரி?

Santhanam’s fascination for Rolls Royce landed him in trouble

Of late, Santhanam is in the news for all wrong reasons. His comedy tracks are no more hilarious, as they tend to be repetitive and monotonous. His competitor, Vadivelu made a friendly (?) advice to him to desist mouthing double meaning dialogues, especially on women. To add insult to the injury, the Censor Board have applied the scissors on his dialogues, in two of his films. And the gravest among all, was the IT raid happened last week at his home and office premises. He has now a great responsibility to overcome the hurdles, to make himself a comedian to reckon with.

It is but common for anyone who climbs the ladder of success to go in for luxury, especially in film industry. One such aspersion has exactly landed him in IT raids. He got fascinated with Rolls Royce car, costing about Rs.5 crores. It is the statutory obligation that anyone who desires to buy such costly fashionable cars, has to submit his financial details as well as his standing in the society. The details he had furnished for acquiring the car, has fallen into the hands of IT department who have acted on the tip off, immediately.

Santhanm now will have double responsibility, one to retrieve his sagging image and the other one (most important one) to come out of the focus of IT department. Hope his intelligence will keep him in good stead.

2 Comments
  1. PauloC says

    I noticed that it’s hard to find your website in google, i found it on 15th spot, you should
    get some quality social bookmarks to rank it in google and increase traffic. I had the same problem with my blog, your should search in google for – k2 seo services – it helped me a lot

    1. admin says

      நன்றி நண்பரே…. முயற்சி செய்கிறேன்

      அன்புடன்

      ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஊருக்கு இளைச்சவன் டைரக்டர் மட்டும்தானா? – ஆடியோ விழாவில் ஆத்திரம்!

‘சாதா’ மோகனை ‘மைக்’ மோகனாக்கி, அவரையும் ‘கமல்ஹாசனை காலி பண்ணிடுவாரு தெரியும்ல’ என்கிற அளவுக்கு புகழடைய வைத்தவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கோவை தம்பி. சுமார் 20...

Close