சந்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் சகுனி

எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் போதே சந்துக்குள்ளிருந்து ஒரு சகுனி எட்டிப்பார்ப்பான். இதுதான் மனசின் மங்காத்தா விளையாட்டு. தமிழ்சினிமாவில் குறுகிய காலத்தில் கோட்டையை பிடித்தவர் சிவகார்த்திகேயன்தான். நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகும் சம்பளமும், அந்தஸ்தும், ரசிகர் கூட்டமும், அவரை அவராலேயே நம்ம முடியாத உயரத்திற்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது.

அவரது ஹாட் கால்ஷீட்டுக்காக ஏழு கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாக தயாரிப்பாளர்கள் சிலரே கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவரை ஆக்ஷன் படம் பண்ணுங்களேன் என்று கண்ணி வெடிக்குள் தள்ள கிளம்பியிருக்கிறது ஒரு கோஷ்டி. ஒரு ஹீரோ எல்லாவகை கேரக்டர்களிலும் நடிச்சுரணும். முதலில் காமெடியா நடிக்கணும்னு வந்தது உண்மைதான். இப்போ அன்பு, காதல்னு மட்டும் இல்லாம உணர்ச்சி பிரவாகம் எடுக்கிற காட்சிகளிலும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன் என்கிறாராம் சிவகார்த்திகயேன்.

அப்படியே ஆக்ஷன் படமும் பண்ணுகிற ஐடியா வந்திருக்கிறதாம் அவருக்கு. ஆனால் முழுக்க முழுக்க ஆக்ஷன் என்று இல்லாமல், தவிர்க்க முடியாத சண்டை காட்சிகளில் சுற்றி சுற்றி அடிக்க ஆசைப்படுகிறாராம்.

முதல்ல இப்படிதான் ஆரம்பிக்கும் எல்லாம்!

Siva Karthikeyan contemplates doing action films!

Siva Karthikeyan is one who has risen to the heights too far in too short a time, amongst the heroes of his genre, in Kollywood. While he himself is amazed at the happening, his pride and ego are slowly taking him over, perhaps. He must have been mesmerized by those producers who are ready and willing to offer as high as Rs.7 crores for his call sheets. It appears some self-centric producers seem to be advising the hero that an actor having got the break in films in comedy roles, should mature into a full-fledged actor by embracing love, family and action films, to retain the stardom. Looking into all these aspects, Siva is now giving into this advice, perhaps. He is reported to have told that he wanted to do action genre films too apart from love and comedy films. However he wanted not to do action films with limited purpose, but with great veracity. When it pours, wise will find way to release excess to save himself!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Aadama Jaichomada Working Stills

[nggallery id=325]

Close