சந்தோஷம் விளையாடும் வீடு…. – சினேகாவுக்கு குவா குவா!

‘டை’ இருக்கிற வரைக்கும் எந்த ஹீரோவுக்கும் ‘டை’ என்பதே இல்லை. யூத் உலகத்தில் தனக்கும் ஒரு சீட் கேட்டு இவர்கள் பண்ணும் அலம்பல்கள் அநேகமாக எல்லா மொழி படங்களிலும் நடக்கிற இனிமையான சமாச்சாரங்கள்தான். ஆனால் ஹீரோயின்கள்தான் பாவம். மூன்று முடிச்சை ஏற்றுக் கொள்கிறபோதே முடிந்துவிடுகிறது அவர்களின் சகாப்தம். கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீங்களா என்ற கேள்வியை நடிகையை பார்த்து கேட்கும் நிருபர்கள் யாரும் நடிகர்களை பார்த்து கேட்பதேயில்லை. சரி, இதெல்லாம் இப்போ எதற்கு? விஷயம் இல்லாமலா?

நடிகை சினேகா திருமணத்திற்கு பின்னாலும் அதே அழகோடும், அற்புதமான சிரிப்போடும் நடமாடி வந்ததை ஒரு பூதக்கண்ணாடி பார்வையோடுதான் கவனித்து வந்தது திரையுலகம். செய்கூலி சேதாரம் இல்லை என்று அவர் நகைக்கடைக்காக கூவிய நேரமோ என்னவோ? கல்யாணத்திற்கு பிறகும் அவரது அழகில் சேதாரம் இல்லை. இந்த ஒரு அந்தஸ்த்தை பயன்படுத்தி அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்க தயாரானது தமிழ்சினிமா. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க அழைக்கப்பட்டார் அவர். புதிய சேனல் ஒன்றில் ஒரு கேம் ஷோவும் நடத்தவும் அழைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் இனியும் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவெடுத்த சினேகா-பிரசன்னா தம்பதி குவா குவாவுக்கு தயாரானார்கள்.

கடந்த சில வாரங்களாகவே சினேகா எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறவில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதும் இல்லை. பின்னணி என்ன என்று விசாரித்த பலருக்கும் இன்ப அதிர்ச்சி. சினேகா முழுகாமல் இருக்கிறாராம். நல்லவேளையாக அவரது கால்ஷீட் காரணமாக எந்த படமும் நிற்கும் நிலையில் இல்லை. எனவே வயிற்றில் இருக்கும் பாப்பாவோடு பேசிக் கொண்டு ஜம்மென ரெஸ்ட் எடுப்பதாக தகவல்.

இன்டஸ்ட்ரிக்கு லட்டு வழங்கும் நாள் எப்போ பிரசன்னா?

Sneha promoted to next level

Sneha will get promoted to the next level in her life, from young married girl to motherhood, soon. Sneha was avoiding film offers post her marriage despite maintaining her charm and beauty. Nevertheless she agreed to act in an important role in Vijay Sethupathi’s Pannayarum Padminiyum. Recently she was signed to anchor a reality show in a TV channel for an exorbitant price not paid to any actress so far.  However, we hear from sources that she seems to be conceived and, hence not participating in any events. She is not even coming out of her home, it appears. Well, good news always to be shared. Congrats Sneha and Prasanna for the promotion. Hope you will share your joy with us too, soon!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாலு பேரும் ரொம்ப நல்லவங்க படத் துவக்க விழாவில் பவர் சீனி

[nggallery id=81]

Close