சந்தோஷ் – சாரிகா நடிக்கும் “ நிராயுதம் “
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர்.
சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர்.
கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – சரவணகுமார்
இசை – கனி / எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
கலை – மோகனமகேந்திரன் / தயாரிப்பு நிர்வாகம் – C.ஜெயராஜ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.B.ராஜதுரை. இவர் இயக்குனர் பார்கவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
தயாரிப்பு – பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம்.
படம் பற்றி இயக்குனர் M.B.ராஜதுறையிடம் கேட்டோம்…
சந்தோஷ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். கதாநாயகி சாரிகா கால் சென்டரில் பணிபுரிகிறார். சந்தோஷ் அமெரிக்காவிலிருந்தாலும் இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறவன்.கால் சென்டரில் வேலை செய்யும் சாரிகா அமெரிக்க மோகம் கொண்டவள்.
எதிர்பாராத சூழ்நிலையில் இருவரும் ஒரு நாள் முழுவதும் ஒருவனால் சிறை பிடிக்கப் பட்டு தனிமையில் அடைக்கப்படுகிறார்கள். இருவரும் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக் கொண்டு உணர்வுகளின் படி கலாச்சாரப்படி இருந்தார்களா ? என்பதே கதை !
இருவரும் கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா! இல்லையா என்பதே திரைக்கதை.
படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
இப்படத்திற்காக ஊட்டியில் ஒரு அழகான வீடு மோகனமகேந்திரனால் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருகிறது.