சன்னிலியோனை தமிழ்சினிமாவில் ஆட விடமாட்டாங்களாம்…! மிரட்டல் ஆரம்பம்!
‘சென்றிடூவீர் எட்டு திக்கும். கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற வரிகளை தலையில் சும்மாடு கட்டி சுமந்து கொண்டிருப்பது தமிழ்சினிமாவின் பில்லர்கள்தான். ஆந்திரா, மும்பை, கேரளா என்று அலைந்து திரிந்து கலைச்செல்விகளை கூட்டம் கூட்டமாக கொண்டு வந்து கடைபோடும் இவர்களில் ‘யாருக்கு யாரு ஒஸ்தி’ என்கிற போட்டியும் ஏற்பட்டிருப்பதால், தமிழனின் ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் ஜாலியோ ஜாலி. சமீபத்திய வரவு கலைச்செல்வி சன்னி லியோன்.
ஊருக்கு ஒதுக்குபுறமான தியேட்டர்களில் முண்டு கட்டிய பாப்பாக்களை தலையில் துண்டு போட்டு மறைத்துக் கொண்டே ரசிக்கும் பல்லாயிரக்கான பக்தர்களுக்கு இந்த சன்னியை தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர் கம்யூட்டர் காமுகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். சட்டை துணிகளை ஒருகாலத்திலும் சட்டை செய்யாத சிங்காரி. புளூ பிலிம் உலகில் கொடிகட்டி பறக்கும் இவரை ஒரு பாடலுக்கு (அதுவும் குத்தாட்டம்தான்) ஆட அழைத்திருக்கிறது கோடம்பாக்கம்.
துரை தயாநிதி தயாரிக்கும் வடகறி படத்தில் இவரை ஒரு பாடலுக்கு ஆட அழைத்திருக்கிறார்களாம். இதற்காக மும்பைக்கே சென்று அவருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்கள். சம்பளம் எவ்வளவு வாங்கினாரோ தெரியவில்லை. இந்த அழைப்பை மிக சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அவரும். இந்த சன்னியுடன் ஆடப் போகும் சார்தான் யார் என்று தெரியவில்லை. அதற்குள் இது கலாச்சார கேடு, இதை அனுமதிக்க மாட்டோம். அவர் எங்கு வந்து ஆடினாலும் அந்த படப்பிடிப்பை நடக்கவிட மாட்டோம் என்றெல்லாம் சந்து மக்கள் கட்சி… ஸாரி, இந்து மக்கள் கட்சி மிரட்டியிருக்கிறது.
போராட்டம் பண்ணுற சாக்குல எட்டிப்பாக்கலாம்னு நினைக்கிற இவங்க தந்திரம் தெரிஞ்சே இந்த பாடலை மும்பையில் ஷுட் பண்ணும் ஐடியாவில் இருக்கிறது படக்குழு.
அட…. வட போச்சே!
Sunny Leone will be debuting in Kollywood with Vadacurry
Durai Alagiri has done a casting coup in Kollywood by roping in much sought star Sunny Leone in his film Vadacurry. Canadian born porn star Sunny Leone is popular around the world, thanks to internet and now having established a firm footing at Bollywood, she is making her foray in South Indian films. Earlier she made her entry in Kannada film industry. Now she will be debuting in Tamil film industry. She will be shaking her legs with Jai (heard from sources) for an item number. What salary was demanded and what has been agreed upon is under wraps.
Meantime, politically insignificant party, Hindu Munnani Katchi has raised a volt of banner saying Sunny Leone degrades Hindu culture and they would not allow her to participate in shooting. Sensing the trouble, the makers are now planning to shoot the song sequence in Mumbai itself now.