சம்பளத்தை விட்டுக்கொடுத்த விமல்!

கடைஞ்ச மோரை, உடைஞ்ச பானையில ஊற்றி வச்ச மாதிரியே நடக்கிறது விமலுக்கு எல்லாமும். இவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இவர் டிராவல் பண்ணிய அதே தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்டார்கள். இவரது நிலைமை மட்டும் இன்னும் சறுக்கல்தான். சமீபத்தில் வெளியான ‘ஜன்னல் ஓரம்’ படத்தினாலும் விமலுக்கு வந்தது ஒரு சத்திய சோதனை. பல்வேறு சிக்கல்களால் பட வெளியீடு களேபரமாக, தனது சம்பளமான அறுபது லட்சத்தை அப்படியே விட்டுக் கொடுத்தாராம் விமல்.

ஒவ்வொரு படமுமே வாழ்வா, சாவா பிரச்சனையாகிவிட்டது தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு. ஆனால் இதில் தப்பித்தவர் ஆர்யாதான். எப்பவோ ஒரு படம் ஹிட் அடிக்கும். அதை வைத்துக் கொண்டு அதே சம்பளத்தில் வண்டியை ஓட்டுவார் அவர். ஆனால் விமல் மாதிரி வில்லேஜ் பேக்ரவுண்டு ஹீரோக்களுக்கு அந்த சாமர்த்தியம் இல்லை. சறுக்கலும் சங்கடமுமாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் விமலுக்கு ஜன்னல் ஓரம் படத்தின் மீது அபார நம்பிக்கை. படம் வெளியிடுகிற நேரத்தில் ஏற்பட்ட சிக்கலையடுத்து இவரை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், ‘உங்களுக்கு படத்து மேல நம்பிக்கை இருக்கா?’ என்றதாம். ‘நிறைய இருக்கு சார்’ என்றாராம் விமல். ‘அப்படின்னா சென்னை நகர விநியோக உரிமையை வாங்கிகிட்டு உங்க சம்பளத்தை விட்டுக் கொடுங்க’ என்று கேட்க, அவரும் ‘ஓ.கே’ என்றாராம் முழு மனதுடன்.

ஒவ்வொரு ஹீரோவும் ரிலீஸ் நேரத்தில் தோள் கொடுத்தாலே அந்த படம் சின்ன சின்ன சிக்கல்களிலிருந்து மீண்டுவிடும். விமலுக்கு இருக்கிற அந்த மனசுக்காக அவரை ஜன்னல் ஓரத்தில் அல்ல, டிரைவர் சீட்டிலேயே உட்கார வைக்கலாம் மிஸ்டர் தமிழ்சினிமா.

Vemal was paid in kind for Jannal Oram!

Vemal is one actor who works sincerely to get to the top, but somehow it seems not happening for the young actor. Vijay Sethupathi and Siva Karthikeyan who came later to the scene have made it big while for Vemal success seems to be elusive. This has resulted in his salary being stagnant for quite some time. For his latest release Jannal Oram he was not paid salary as there were some financial problems. Producers’ Council called the actor and asked if he has confidence on the film to which Vemal said he has lot of confidence on the film. The council then suggested to him to take the Chennai area distribution of the film in lieu of his salary which he has agreed to. Small budget films thrive because of good hearts like Vemal.

1 Comment
  1. vedagiri says

    If he maintains this attitude with hardwork, he will surely become one of top stars in Tamil Cinema. Watching actors like Siva karthikeyan behaving like Royal Moron, it makes me anger and frustrated.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகை சங்கவி போலீசை நாடியது ஏன்?

புதிய கட்டிடத்தில் ஜாம் ஜாமென இயங்க ஆரம்பித்திருக்கிறது சென்னை நரக காவல் துறை ஆணையர் அலுவலகம். எந்த நேரத்தில் திறக்கப்பட்டதோ, காதல் ஜோடிகளும் கவர்ச்சி நடிகைகளும் பஞ்சாயத்துக்காக...

Close