சர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம் -தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்பு

வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறி பகிர்ந்துகொள்கிறார்கள். மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். கொச்சி எர்னாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் சர்வதேச புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம் கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

 

KABILAN VAIRAMUTHU ON NATIONAL STAGE

The young writer has been invited to perform in the north-eastern and southern poetry forum organized by Sahitya Akademi at Kochi

As part of Antharashtra Pusthakotsava Samithi’s Kochi International Book Festival 2014, Sahitya Akademi has organized a North Eastern and Southern poetry forum. The Akademi has chosen Young writer Kabilan Vairamuthu, and poet Ravisubramaniam from TamilNadu to participate in the forum and read their poems on the national stage. Young and eminent poets from the North east states have been invited to share their writings. The objective of the program is to include as many languages as possible from the North East and South – to make an attempt to nurture and cherish the deep socio-cultural bonds between Indian languages and people. Inspiring personalities from various fields from all over the country are expected to join the memorable occasion. “The cause of the program is beautiful. It is an honor to be part of it” says Kabilan Vairamuthu.

Read previous post:
ஒரு சொல் கேளீர்

ஒரு சொல் கேளீர் (ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு)   சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் நிகழ்ச்சி, ஒரு சொல் கேளீர். மக்கள்...

Close