சாணை பிடிச்ச கத்தரிதான்… ஆனால் சரக்குன்னு வெட்டல!

எவ்வளவு பரிசுத்தமான படமாக இருந்தாலும், லேசான கீறல் போடாமல் அனுப்புவதில்லை சென்சார் அமைப்பு. கடந்த சில மாதங்களாகவே ‘உங்க கத்தரிக்கு சாணை பிடிக்கணுமப்பா…’ போன்ற விமர்சனங்கள் சென்சாரை கொந்தளிக்க வைத்திருந்தது. இந்த நேரத்தில் வருகிற எல்லா படங்களையும் விட்றேனா பார் என்கிற பார்வையோடு பார்த்து வந்த அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்திற்கு ஒரு இடத்திலும் கட் கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரஸ்சை சந்திக்கும் போது, பலரும் சிவகார்த்திகேயனிடம் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்க மேல குழந்தைகளும் ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்காகவாவது மது குடிக்கிற காட்சிகளை தவிர்க்கலாமே?’ என்றார்கள். ‘நீங்க சொல்றதை கண்டிப்பா மனசுல வச்சுக்கிறேன்’ என்று கூறியிருந்தார் அவர். அந்த சொல்லை நிரூபிப்பதை போல இந்த படத்தில் யு/ஏ காட்சிகளுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறார் அவரும் படத்தின் இயக்குனர் திருக்குமரனும்! முக்கியமாக படத்தில் டபுள் மீனிங் வசனங்களே இல்லையாம். அதனால் படத்திற்கு க்ளீன் யூ சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார்.

படத்தில் சந்தானமில்லை என்று செய்திகள் வரும்போதே டபுள் மீனிங் இருக்காது என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா? அப்படின்னா காமெடிக்கு யார் இருக்கா? சூரியும், எதிர்நீச்சல் சதீஷும்தான்! குறிப்பறிஞ்சு பொறுப்பறிஞ்சு காமெடி பண்ணி நீங்களும் வாழ்ந்து சிவகார்த்தியேனையும் வாழ வைங்க காமடியன்களா?

ஏப்ரல் 4 ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கிறது ‘மான்கராத்தே’

Maan Karate gets clean U certification from Censors!

Siva Karthikeyan’s Maan Karate has been censored and has been awarded clean U certification without any deletions of scenes or mute of dialogues. There was absolutely no ‘adult’ scene or a double meaning comedy dialogues in the film, say sources, which helped the film gets the U certification. Soori and Edhir Neechal Sathish are in-charge of comedy in the film supporting Siva in the film. The film is slated for release on 4th April.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மலேசியாவில் படமான ”ஜாக்கி” யுவன் – தர்ஷிதா பாடல் காட்சி

[nggallery id = 415]

Close