‘சாமி கும்பிட போனா கூட சர்ச்சையாக்குறானுங்களே…’ விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
சாமி கும்பிட போனா கூட சர்ச்சையாக்குறானுங்களே… என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபலம்ஸ்களின் பிராப்ளம்ஸ் என்று பேச ஆரம்பித்தால், பொது இடங்களில் சிக்கிக் கொள்வதை போன்ற சிக்கல் அவர்களுக்கு வேறொன்று இல்லை. ம்… அவருன்னா சட்டுன்னு நடக்கும். நாங்கன்னா கால் கடுக்க காத்துக்கிடக்கணும். இதையெல்லாம் தட்டிக் கேட்க வெள்ளக்காரன்தான் வரணும் என்பார்கள் சிலர். மிசா வரணும்யா… என்பார்கள் வேறு சிலர். இப்படி ஊர் வாயில் விழுந்து, உபத்திரவப்படுவதை விட, சும்மாவே இருந்திருக்கலாம் என்றெல்லாம் தோண வைப்பார்கள் சம்பந்தப்பட்ட வி.ஐ.பிகளை. இப்படியெல்லாம் பேசுவாங்கன்னு தெரிஞ்சுதான் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிறார் போலிருக்கிறது அஜீத்.
ஆனால் அஜீத் மாதிரி உஷாராக இல்லாத விஜய் அப்படியொரு அடங்கா சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். யாரோ ஒரு ஜோதிடரின் பேச்சை கேட்டு சனிஸ்வரன் கோவிலுக்கு போயிருந்தாரல்லவா? ‘ஒரு கிறிஸ்துவர் எப்படி சனீஸ்வரன் கோவிலுக்கு போகலாம்?’ என்று அவரது மதத்தினர் சிலரே பிரச்சனையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்களாம். அட… அது சொந்த மதத்தின் சொல் வீச்சு. அதை கூட சமாளித்துவிடலாம். ஆனால் வார நாட்களில் அதிகாலை நான்கு மணிக்குதான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆகம விதிகள் இருக்கிறதாம். அப்படி இருக்கும்போது, ஒரு மணி நேரம் முன்னதாக அதிகாலை மூன்று மணிக்கே சன்னதியை திறந்து விஜய்க்காக அர்ச்சனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.
இது சாமி குத்தம் ஆகாதா என்றெல்லாம் சர்ச்சைகளை கிளப்புகிறார்களாம் திருநள்ளாறு வட்டாரத்தை சேர்ந்த குல கொழுந்துகள். இதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை விஜய். ஆனால் அங்கிருக்கும் டீக்கடைகளிலும், மண்டப வாசலிலும் இந்த மேட்டர் ரொம்ப சீரியசாக விவாதிக்கப்படுவதால் விஜய் ரசிகர்களின் கன்னங்கள் சிவந்து கண்களும் கோவப்பழம் ஆகி வருகிறதாம். நிலைமையை கட்டுக்குள் அடக்கவில்லை என்றால், இப்படி தாறுமாறாக பேசுகிறவர்களின் நிலைமை ‘கட்டுக்குள்’ அடங்கிவிடும் என்கிறது காரைக்காலில் இருந்து வரும் ‘டெரர்’ தகவல்கள்.
Vijay’s Thirunallaru visit creates controversy
Ilayathalapathi Vijay recently visited Thirunallaru Saniswaran temple along with his family members, on the advice of astrologers. But the visit has landed Vijay in the midst of the controversy.
Vijay being a Christian has visited the Hindu temple do not go well with the Christian community. They have questioned the wisdom of Vijay to make such a trip to Thirunallaru. On the other hand Hindu activists question the temple authorities as to how they could violate the ‘Agama’ rules of performing pujas to deity at the odd hours. It is learnt that special pujas were conducted in the temple by the Saniswaran temple authorities at as early as 3 a.m. which is against the established rules and traditions.
Though Vijay was silent on the subject, his fans are furious about those who question about his visit to the temple. It is ironical that when Vijay wanted to visit the temple to ward of bad time, the very visit itself had put him in controversy.