சால்ட்டாவது…. பெப்பராவது… ‘டை’ அடிக்கிறார் அஜீத்

மங்காத்தாவில் ஆரம்பித்த ஸ்டைல் இது. ‘தலைவா… இதையே மெயின்ட்டெயின் பண்ணு….’ என்று ரசிகர்கள் கொண்டாட, தனது தலைக்கு டை அடிக்காமலே விட்டுவிட்டார் அஜீத். இதற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்று செல்ல பெயரிட்ட அஜீத் அர்பணிப்பு மன்றத்தினர் பலர் தங்கள் தலைக்கும் டை அடிக்காமல் விட்டு, சிகை அலங்கார நிபுணர்களின் வருமானத்திற்கு வேட்டு வைத்தார்கள். இவர்கள் தந்த பிரச்சனை இது என்றால், அதற்கப்புறம் வந்த எந்த படத்திற்காகவும் தலையில் கை வைக்கவிடவில்லை அஜீத்.

கூகுளில் அஜீத் ஸ்டில்லை தேடுகிறபோது அது எந்த படத்தின் ஸ்டில் என்பதையே கூட தெரிந்து கொள்ள முடியாதளவுக்கு எல்லாம் ஒரே மாதிரி இருந்து குழப்பியது தனி அவஸ்தை. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அஜீத் நினைத்தாரா, அல்லது கவுதம் நினைத்தாரோ தெரியவில்லை. இந்த சால்ட் அன்டு பெப்பர் தலைக்கு முடிவு கட்ட போகிறார்களாம். கவுதம் இயக்கவிருக்கும் புது படத்தில் அஜீத் நரையில்லாத யூத்தாக நடமாடப் போகிறார்.

இதற்காகவே கவுதம் மேனனுக்கு சிகையலங்கார நிபுணர்கள் சங்கம் சார்பில் கன்னங்கரெலென ஒரு நன்றி வந்து சேரும் போலிருக்கிறது.

Youthful look for Ajith in Gautham’s film

Ajith has been maintaining ‘salt and pepper’ from the moment it created a sensation amongst his fans. The style resembles the famous look of George Clooney of Hollywood and has given Ajith a unique look. It is to the credit of boldness on the part of Ajith to take up the characters as he looks in real life. However, it is said that Gautham Menon will be presenting Ajith in a refreshingly new avatar a youthful one in his upcoming film with the star.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளு சார்… -நடிகை மீனாட்சி வைத்த ஐஸ்!

ஏ.வி.எம் புதிய பிள்ளையார் கோவிலில் ‘வில்லங்கம்’ படத்தின் துவக்க விழா நடைபெற்றது. ரெட் ஒன் புரடக்ஷன் சார்பாக இந்த படத்தை சுமதி அண்ணாமலையும், ரா.நா.சரவணனும் தயாரிக்கிறார்கள். படத்தை...

Close