சிட்டாக வந்தார் ராஜா சிரிப்பில் மலர்ந்தது சினேகன் முகம்
இசைஞானி இளையராஜா உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் இசையமைக்கும் படம் மட்டுமல்ல, 2014 ல் அவர் ஆர்மோனியப் பெட்டி இசைக்கும் படமும் நம் படத்துக்காக என்கிற பெருமை கவிஞர் சினேகனின் மனசு கொள்ளாமல் புன் சிரிப்பாக எட்டிப்பார்க்கிறது.
பிரபல பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடிக்கும் சரித்திர படம் ராஜராஜனின் போர்வாள். இது ராஜா காலத்து கதையையும் நிகழ்காலத்து கதையையும் இணைத்த மஹதீரா டைப் கதை என்கிறார்கள். இதற்கு இசைஞானி இளையராஜாவின் இசைதான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் வசம் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் சினேகன். நடுவில் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் ராஜா அனுமதிக்கப்பட்டபோது, உலகமே அதிர்ந்தது. உலக தமிழர்களை எல்லாம் விட இன்னும் ஒரு இஞ்ச் உயரத்திற்கு அரண்டு புரண்டவர் சினேகன்தான். அதற்கான காரணம் இந்த படத்தின் இசையே அவரை நம்பி இருக்கிறதே என்கிற கவலைதான்.
இந்த கவலையெல்லாம் போக்கும் விதமாக ஞாயிற்றுக் கிழமை இப்படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார் இளையராஜா. ட்யூன் வேலைகள் வழக்கம்போலவே விறுவிறு என முடிந்தது. இதற்கான குரல் பதிவை அதே சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் திங்கட் கிழமை நடத்தவிருக்கிறார் இசைஞானி.
Maestro Ilayaraja resumed work despite doctor’s advice
Maestro Ilayaraja who suffered a mild heart attack is recouping well at home and the doctors’ have advised him complete rest for a month. But the composer has resumed his work. The legendary composer arrived at Prasad studios, on Sunday the 5th Jan. which is ironically the same place where he suffered his heart attack. He started composing a track for Snehan’s film Rajaraja Chozanin Porvaal. “Raja sir was not supposed to come, but he said that he had let down people by not going to Malaysia (for a show on December 28) and would not let people down in the New Year and so he came for recording,” said a source with the unit of the film Rajaraja Chozhanin Porvaal. It is learnt that he would record the vocal on Monday the 6th Jan. at the recording theatre.