‘ சினிமா வௌங்கிரும்டா… ’

சிறு பட தயாரிப்பாளர்களை உண்டு இல்லை என்று ஆக்குவதில் பெப்ஸிக்கு இணை அவர்களேதான். சின்ன்ன்ன்ன்ன்ன்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பதில் ஆரம்பித்து, சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொக்காயை பிடித்து மிரட்டுவது வரைக்கும் அவர்களின் மிரட்டலுக்கு பயந்தே சினிமாவை விட்டு ஓடியவர்கள் ஏராளம். இந்த இழிநிலையை போக்க எத்தனையோ முறை போராடியும், ஒன்றும் நடக்காமல் மவுன அழுகை வடித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். என் விருப்பப்படி வேலைக்கு ஆள் வச்சுக்குற நிலைமை எப்போதுங்க வரும்? என்று தயாரிப்பாளர் சங்கத்தின் கதவுகளை தட்டி தட்டியே விரல்கள் தேய்ந்த அவர்களின் சோகக்கதையில் அடுத்ததாகவும் ஒரு பலி. அவர்தான் கஸாலி.

துபாயில் சுய தொழில் செய்து வந்த இவருக்கு கதை கவிதைகள் எழுதுவதில் ஆர்வம். பிரபல இதழான ஆனந்த விகடனுக்கு துபாய் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றி வந்தவர் இவர். சினிமா மீதிருக்கும் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த வீட்டை அடமானம் வைத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் ஒரு படம் எடுக்க வந்தார். முழு படத்தையும் முடிகிற தருவாயில் ஒரு பிரமோஷன் பாடல் எடுக்க மஹாபலிபுரத்திற்கு சென்றிருந்தார். தினந்தோறும் லட்சக்கணக்கில் செலவழித்துவிட்டோம். பிரமோஷன் பாடல்தானே. கைக்கு அடக்கமாக செலவு செய்து எடுத்துவிடலாம் என்று ஹீரோ, ஹீரோயின், வாடகை குறைவான டிஜிட்டல் கேமிரா, மற்றும் சில துணை நடிகர் நடிகைகளுடன் சென்று கேமிராவை வைத்து ஒரு மணி நேரத்திற்குள் இந்த படத்தில் வேலை பார்த்த தயாரிப்பு நிர்வாகி திரு. கந்தவேல் திரு. கே.எஸ். சரவணன், துணை இயக்குநர் திரு. சிவா, ஒளிப்பதிவாளர் வந்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்களாம்.

சம்பளத்தை எண்ணி வச்சுட்டு படத்தை எடுங்க என்று இவர்கள் முரண்டு பிடிக்க, இப்போதைக்கு எடுத்து முடிச்சுடுறேன். மிச்சத்தை உங்க சங்கத்திலேயே வந்து பேசி தீர்த்துக்கலாம் என்று இவர் மன்றாட, எதுவும் நடக்கவில்லை. அன்றைய தினம் சுமார் ஒரு லட்சம் எந்த வேலையும் நடக்காமலேயே காலி.

சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம். படித்துவிட்டு சாபம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம். சினிமா வௌங்கிரும்டா….

பிப்ரவரி 07, 2014

பெறுநர்:
தலைவர்,
தென்னிந்திய திரைப்பட தொழிலார்கள் (ஃபெஃப்ஸி) அமைப்பு,
சென்னை.

ஐயா,
பொருள்: ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’பட புரொமோசன் படப்பிடிப்பில் தகராறு சம்பந்தமாக!

நான் H3 சினிமாஸ் சார்பாக ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’என்ற தமிழ் திரைப்படம் எழுதி, தயாரித்து, இயக்கிக்கொண்டிருக்கிறேன்.

நான் அடிப்படையில் பி.எஸ்.ஸி அக்ரி முடித்துவிட்டு 15 வருடங்கள் துபாயில் சொந்தமாகக் கம்பெனி நடத்திவிட்டு, சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னை வந்து, சிறிது காலம் சில படங்களில் நட்பு ரீதியில் பணியாற்றி, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டு, சமீபத்தில் மேற்சொன்ன சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற தமிழ் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

தற்சமயம் படங்களுக்கு புரமோசன் மிக அவசியம் என்பதை உணர்ந்து, டீஸர், டிரெய்லர் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று நிகழ்த்தி படத்தினை உயர்த்துவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.

எனது படத்தில் திரு கந்தவேல் என்பவரை புரடக்சன் எக்சிகியூட்டிவாக நியமித்தேன்.
– அவர் சரியானபடி கொடுத்த வேலையைச் செய்யவில்லை,
– செலவினத்தில் நிறைய கையாடல் செய்தார். கேட்டதற்கு, ‘அப்படித்தான் செய்வேன், ஏதாவது தகராறு செய்தால் யூனியனிடம் சொல்லி படத்தை எடுக்க முடியாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டினார்.
– போஸ்ட் புரடக்ஷன் வேலைக்கு எந்தவொரு தகவலும், உதவியும் செய்யவில்லை. கேட்டால், சில கம்பெனிகள் கொடுத்த பட்ஜெட்டை அதிகப்படுத்திக் கூறி மலைக்க வைத்தார். டப்பிங் பேசுவதற்கு நடிகரின் தொடர்பு எண் கேட்டேன். தர மறுத்துவிட்டார். எனவே எனக்கு தெரிந்த வரையில் சொந்த முயற்சியில் அந்த வேலைகளைச் செய்தேன்.
– கடந்த டிசம்பர் மாதம் பாடல் வெளியிட்டோம். அதற்கும் வராமல், மற்றவர்களையும் வராமல் தடுக்க முயன்றார்.

இதுவரை கிட்டத்தட்ட 90% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஏற்கெனவே உடன் வேலை பார்த்த திரு. கந்தவேல் & அவரது குழு ஒழுங்காக செயல்படாமல் நிறைய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். மீண்டும் இவர்களை வைத்து செயல்பட்டால், செலவு மிக அதிகமாகி என்னால் முழுமையாக படம் முடித்து வெளிவரமுடியாத நிலை ஏற்படும். எனவே, ப்ரமோஷன் படப்பிடிப்புக்கு, வேறு சிறிய டீமை ஏற்பாடு செய்தேன்.

நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு டூரிசம் ரிசார்ட்டில் படத்தின் புரமோசனுக்காக, டூரிசம் டிபார்ட்மெண்ட்டில் முறையான அனுமதி பெற்று, ஒரு சிறிய குழுவை வைத்து படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்தேன். படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில்,
1. திரு. கந்தவேல், புரடக்சன் எக்சிகியூட்டிவ் (செல்: 9677888959 / 9444411222)
2. திரு. கே.எஸ். சரவணன், துணை இயக்குநர் (செல்: 9841306509)
3. திரு. சிவா, ஒளிப்பதிவாளர் (செல்: 9380535143 / 8754530146 / 7845708009)
மூவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, மிரட்ட ஆரம்பித்தனர். அப்போது திரு. கந்தவேல் ‘ஏற்கெனவே சொன்னது காதில் ஏறவில்லையா? படம் முடிவது பற்றிக் கவலை இல்லை. மீதம் கொடுக்க வேண்டிய எல்லா பணத்தையும் இப்போதே கொடுத்துவிட வேண்டும்’ என்றார். நான் ‘ஏற்கெனவே நீங்கள் பேசிய தொகையைவிட அதிகம் எடுத்துக்கொண்டீர்கள், ஆனாலும் பரவாயில்லை, இப்போது கொஞ்சம் பணம் தருகிறேன். மீதம் கொஞ்சம் கொஞ்சமாக படம் வெளியிடும் முன்பு தந்து முடித்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அவர் மறுத்துவிட்டு, தகராறில் ஈடுபட்டார். ஆரம்பித்த படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.
பிரச்சனை நீண்டுகொண்டே சென்று என் பணமெல்லாம் விரயமாகிக் கொண்டிருந்தது. நான் ‘நீங்கள் முறைப்படி சங்கத்தில் புகார் கொடுங்கள், அங்கு பேசி முடித்துக்கொள்ளலாம், இப்போது படப்பிடிப்புத் தளத்தில் தகராறு செய்தால் எனக்கு பணம் விரயமாகிறது’ என்றேன். அதற்கு அவர் ‘அதுதானே எனக்கு வேண்டும், உங்களை மாதிரி சின்ன தயாரிப்பாளர்கள் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் ’ என்றார்.

நான் ‘ஃபெஃப்ஸி’யின் தலைவர் திரு. அமீரிடம் முறையிடுவேன்’ என்றேன். அதற்கு அவர், தலைவரைப்பற்றி சொன்ன வார்த்தைகளை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது.

நான் காவல் நிலையம் சென்றேன். காவலர்கள் வந்தார்கள். அப்போது மணி மாலை 4 ஆகிவிட்டது. ஏற்கெனவே படப்பிடிப்பு நடக்கவில்லை, செலவு செய்த பணமெல்லாம் விரயமாகிவிட்டது, மனம் வெம்பிப்போய் இருந்த நான், அப்படியே படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பிவிட்டேன். அதனால் எனக்கு பண விரயம், குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி என் படத்தை சந்தைக்கு விற்க முனைவதில் தாமதம், மனகுழப்பம், எனக்குக் கடன் கொடுத்த உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் என்னைப்பற்றிய அவ நம்பிக்கை இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலம் பற்றிய பயத்துடனும், மனக் கலக்கத்திலும் இருக்கிறேன்.

நேற்று என்னை தரக்குறைவாகப் பேசியவர், இன்றும் மதியம் 12.42க்கு போனில் அழைத்து மீண்டும் தகாத வார்த்தைகளில் மிகக் கேவலமாகப் பேசினார்.

நான் எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை:

வேறு எந்தத் துறையிலாவது பெரும் பணம் முதலீடு செய்த முதலாளிகள் (தயாரிப்பாளர்கள்) இப்படிப்பட்ட கேவலமான பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பார்களா? இந்நேரம் வீணாக தொந்தரவு செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க மாட்டார்களா?
பெரிய அளவுக்கு பணத்தைப் போட்டுவிட்டு மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம்’ என்று இருக்கும் இந்த சினிமா துறைக்கு வந்து, என் உழைப்பு, நேரம், பணம் இவற்றையெல்லாம் கொட்டியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

நான் அடிப்படையில் ‘லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்’, கல்ப்பாக்கம் அணுமின் நிலையம் முதற்கொண்டு நிறைய இடங்களில் லேண்ட்ஸ்கேப் டிசைன் & புராஜக்ட் செய்து கொடுத்திருக்கிறேன்.
நிறைய சிறுகதைகள் எழுதி அவை ஆனந்த விகடன், கல்கி, குமுதம், தேவி, பாக்யா, இதயம் பேசுகிறது போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. அவனுக்கென்றொரு மனம் என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறேன். தோட்டக்கலை பற்றிய தகவல்களை கலைஞர் டீவி, மக்கள் தொலைக்காட்சி மற்றும் சில வாரப் பத்திரிகைகளில் பேட்டிகளாகவும், கட்டுரைகளாகவும் கொடுத்திருக்கிறேன்.

ஒரு படைப்பாளியாய் சினிமாவுக்கு வந்து, இப்படிப்பட்டவர்களுடன் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணி வருத்தப்படுகிறேன்.

இந்த சாய்ந்தாடு சாய்ந்தாடு திரைப்படம் தயாரிப்பதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டிருக்கிறேன். விருதுநகரில் நான் குடியிருந்த வீட்டை விற்றிருக்கிறேன். தங்க நகைகளை அடமானம் வைத்திருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். மாதா மாதம் வட்டி கட்ட முடியாமலும், படத்தை முடித்து வெளியே கொண்டு வரமுடியாமலும் திணறிக்கொண்டிருக்கிறேன். இந்த புரமோசனுக்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறேன். இந்த விபரங்கள் எல்லாம் அந்த மூன்று பேருக்கும் தெரியும். இவையெல்லாம் தெரிந்தும் அவர்கள் இப்படி நடந்துகொண்டால் அவர்களைப்பற்றி நான் என்ன நினைப்பது? அவர்களின் மேற்படி செயல்பாட்டை நான் எப்படி எதிர்கொள்வது?

ஏற்கெனவே கோடியில் முதலீடு செய்து, இதுவரை ஒரு ரூபாய்கூட வரவு இல்லாத நிலையில், மேலும் நேற்று இவர்கள் எனக்கு ஏற்படுத்திய ரூபாய் 95,000/- வரை நஷ்டத்தை நான் எப்படி பொறுத்துக்கொள்வது? சங்கம் இவர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டுகிறேன்.

படைப்பாளிக்கும் மரியாதை இல்லை, போட்ட பணத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இப்போது நான் என்ன செய்ய?

ஏற்கெனவே விசயம் பல இடங்களுக்குப் பரவஆரம்பித்துவிட்டது.

எனக்கோ, என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மேற்சொன்ன மூவரும்தான் காரணம்.

ஃபெஃப்ஸி அமைப்பு விசாரித்து, படைப்பாளி & சிறிய தயாரிப்பாளரான எனக்கு நல்ல முன்னோடியான தீர்வைத் தரும் என்று மனமார நம்புகிறேன்.

எதிப்பார்ப்புடன்,
எச்3 சினிமாவுக்காக,

கஸாலி
தயாரிப்பாளர் & இயக்குநர்.

Small budget films are boon or bane for producers?

While the high echelon of the Kollywood pay rich tribute to the small budget films, the real happening episode or behind the curtain acts while producing such small budget films are so degrading and intimidating, if one goes by the hardships faced by such small time producers. The reason FEFSI who should in fact help those people who come to industry for producing films, with better counselling and good co-operation. Instead the organisation’s name is tarnished because of certain parochial and dishonest people, who milk these producers to the core, for their self benefits.

The recent example is producer-director Gazali who is producing and directing his debut film Sainthadu Sainthadu. He was working with handsome salary in Dubai and has returned to his native town to make a debut in films. He sold his properties and borrowed from his friends and relatives to produce the film Sainthadu Sainthadu. While the film is almost completed with post production work to commence, Ghazali in order to control his budget planned to shoot a promo song with lead actors and with the help of ‘extra’ artistes at Mahabalipuram, with a handheld camera. Suddenly the production executive Kandhavel, Camera person Siva, and Asst. Director Saravanan gate crashed into the location and asked him to settle their salary and commence the shoot. His pleading and requests were fallen into deaf ears. Instead he received abusive and intimidating words from them. He incurred a loss of about Rs. One lakh, as the shooting had to be cancelled.

He had filed a complaint against the FEFSI narrating the incidents and how he has been absued and threatened. He also indicated while he in fact paid all their salaries and dues, their demand was not logical. He also submitted in his complaint that they not only abused him but also absued the President of FEFSI, Mr. Ameer too.

Well! The moral of the story – Cinema as life or career is only for select few and those who have the right connections. Is it any different from other fields? Is it a boon or bane for those who wanted to enter cinema?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படுகோனே பற்றி படு கோணல் நியூஸ்?

தமிழ்சினிமா ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி ஒன்று ஆறறிவையும் மழுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியின் வேகம் கண்டு தீபிகா படுகோனே கூட...

Close